சிம்புவை கல்யாணம் பண்ணிக்க நான் ரெடி ; ஆனால் ட்விஸ்ட் வைத்த சீரியல் நடிகை
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக அதே சமயம் பலசர்ச்சைகளை சந்தித்து தற்போது மீண்டும் தனக்கான இடத்தை பிடித்தவர்தான் சிம்பு.
சிம்பு பல சர்ச்சைகளை தாண்டி கடந்த ஆண்டு வெளியான மாநாடு படத்தின் மூலம் திரைத்துரையில் வலுவான தனது ரீ-எண்ட்ரியை கொடுத்தார். தற்போது வெந்து தணிந்தது காடு, பத்து தல, கொரோனா குமார் என பல படங்களில் நடித்து வருகிறார் .
இந்த நிலையில் பிரபல சின்னத்திரை நடிகை தான் சிம்புவை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக தெரிவித்துள்ளார்.ஆம் பிரபல சீரியல் நடிகை ஸ்ரீநிதி சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் மீம் ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.
அதில், எல்லோருக்கும் ஒரு நாள் கல்யாணம் நடக்கும். ஆனால் நானும் எஸ்டிஆர் மட்டும் அப்படியே இருப்போம் . என்று சொல்ல அதற்கு இன்ஸ்டாவசிகள் பேசாமல் ஏன் நீங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள கூடாது?” என்று கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்துள்ள ஸ்ரீநிதி நல்லா தான் இருக்கும் ஆனால் எனக்கு இப்போ ஆள் இருக்கே என்று கிண்டலாக கூற அவரது பதிவு தற்போது வைரலாகி வருகிறது.