நீங்க இல்லன்னா உங்க அம்மா கூட ஓகே...அட்ஜஸ்ட்மென்ட் கேட்ட பிரபலம் - ஸ்ரீநிதி ஓப்பன் டாக்!

Tamil Cinema Tamil TV Serials Tamil Actress Actress
By Jiyath Aug 06, 2023 02:12 AM GMT
Report

அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை குறித்து சீரியல் நடிகை ஸ்ரீநிதி பேசியுள்ளார்.

நடிகை ஸ்ரீநிதி

ஸ்ரீநிதி கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் பிறந்தார். மாடலிங் மற்றும் போட்டோஷூட் மூலமாக தனது திரை வாழ்க்கையை தொடங்கினார். இவர் பிரபல தமிழ் தொலைக்காட்சியான கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான 'தாரி' என்ற தொடர் மூலம் தமிழில் அறிமுகமானார்.

நீங்க இல்லன்னா உங்க அம்மா கூட ஓகே...அட்ஜஸ்ட்மென்ட் கேட்ட பிரபலம் - ஸ்ரீநிதி ஓப்பன் டாக்! | Serial Actress Sreenidhi Opens About Adjustment

பின்னர் விஜய் டிவியில் 'செந்தூரப்பூவே' என்ற சீரியலில் நடித்தார். இதன் மூலம் இன்னும் பிரபலம் அடைந்தார். தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் 'தெய்வம் தந்த பூவே' என்ற சீரியலில் நடித்து வருகிறார். இந்நிலையில் பிரபல யூடியூப் சானெல் ஒன்றுக்கு பேட்டியளித்திருந்தார் ஸ்ரீ நிதி. அப்போது அவரிடம் அட்ஜஸ்ட்மென்ட் குறித்து கேள்விகள் கேட்கப்பட்டது.

ஸ்ரீநிதி பேட்டி

அதற்கு பதிலளித்த ஸ்ரீநிதி "அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை குறித்து எனக்கு நிறைய அனுபவம் இருக்கிறது. எனக்கு ஒரு பெரிய பட்ஜெட் மலையாள படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அப்போது நான் 10ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். அப்போது பட தரப்பிலிருந்து நீங்கள் அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வேண்டும் என்று கூறினார்கள்.

நீங்க இல்லன்னா உங்க அம்மா கூட ஓகே...அட்ஜஸ்ட்மென்ட் கேட்ட பிரபலம் - ஸ்ரீநிதி ஓப்பன் டாக்! | Serial Actress Sreenidhi Opens About Adjustment

நான் அவர் கேட்டதை உணவு, தாங்கும் இடம் போன்றவற்றை அட்ஜஸ்ட் செய்ய வேண்டும் என்று சாதாரணமாக நினைத்தேன். அப்போது அந்த நபர் என்னிடம் அந்த அட்ஜஸ்ட் கிடையாது மத்த அட்ஜஸ்ட்மென்ட் பற்றி பேசுகிறேன் என்று கூறினார். எனக்கு அது புரியவில்லை எனது அம்மா என்னிடம் இருந்தார். அம்மா வந்து 'சாரி சார்... எங்களுக்கு அது இன்ட்ரெஸ்ட் கிடையாது.

நாங்கள் நல்ல குடும்பத்திலிருந்து வருகிறோம் என்று கூறிவிட்டு நாங்கள் அங்கிருந்து புறப்பட்டோம். அப்போது அந்த நபர் வந்து 'மகள் இல்லையென்றால் பிரச்சனை இல்லை, அம்மாவாக இருந்தாலும் ஓகே தான் என்று கூறினார். அப்போது எனது அம்மா மிகவும் சோகமடைந்தார் என்று பேட்டியளித்துள்ளார்.