இந்த வயசுல தேவையா? கணவர் அந்த விஷயத்திற்கு ஒத்துக்கல..நடிகை சந்தோஷி ஓபன் டாக்!

Tamil Cinema Youtube Tamil TV Serials Tamil Actress
By Swetha Jun 11, 2024 08:19 AM GMT
Report

 தனது தொழில் பயணம் குறித்து பேட்டி ஒன்றில் நடிகை சந்தோஷி பேசியுள்ளார்.

நடிகை சந்தோஷி  

நடிகை சந்தோஷி பாபா படத்தில் ஹீரோயினின் தங்கை கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் பரிட்சயம் ஆனார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானார். இவர் சிறந்த பெண் காமெடி நடிகைக்கான நந்தி விருதை வென்றுள்ளார்.

இந்த வயசுல தேவையா? கணவர் அந்த விஷயத்திற்கு ஒத்துக்கல..நடிகை சந்தோஷி ஓபன் டாக்! | Serial Actress Santhoshi Shares Her Emotinal Story

இதைத் தொடர்ந்து சினிமாவில் இருந்து சற்று விலகிய அவர் சீரியல்களில் தனது கவனத்தை திருப்பினார்.அங்கு கதாநாயகியாக ஏராளமான சீரியல்களில் நடித்து இல்லத்தரசிகளுக்கு பிடித்தமான நடிகையாக மாறினார். இவர் தன்னுடன் நடித்த ஸ்ரீகர் என்பவரை மணந்துக் கொண்டார்.

இவருக்கு ஒரு மகன் இருக்கும் நிலையில், இரண்டாவது பிரசவத்தில் இரட்டைக் குழந்தைகளுக்கு தாயானார். தற்போது இவர் ப்ளஷ் பொட்டிக் அண்ட் பியூட்டி லாஞ்ச் என பெண் தொழில் முனைவோராகவும் மிளிர்கிறார். இதை தவிர மேக்கப் ஆர்டிஸ்ட் பயிற்சியும் கொடுத்து வருகிறார்.

இந்த நிலையில், நடிகை சந்தோஷியிடம் அவரது இந்த தொழில் பயணம் குறித்து பேட்டி ஒன்றில் பேசியிருந்தார். அதில்,மேக்கப் ஆர்டிஸ்ட் ஆவது குறித்து என் கணவரிடம் சொன்ன போது, அவர் இதை ஏற்றுக்கொள்ளவே இல்ல, நீ ஒரு நடிகை, ஹீரோயினா நடிச்சு இருக்க, விருது வாங்கி இருக்க நீ போய்,

மூளை நரம்பில் பிரச்சனை; உயிர் பிழைக்க மாட்டேன் - சீரியல் நடிகை வேதனை!

மூளை நரம்பில் பிரச்சனை; உயிர் பிழைக்க மாட்டேன் - சீரியல் நடிகை வேதனை!

ஓபன் டாக்

கல்யாணத்திற்கு மேக்கப்போடுவியா என கேட்டார். அவருக்கு இதை நான் புரிய வைப்பதற்கே பல நாட்கள் ஆச்சு. அதன் பிறகு என் உழைப்பை பார்த்து என சர்ப்போர்ட் பண்ண தொடங்கினார். ஒரு சீரியலில் நடித்தா 10 நாட்கள் சூட்டிங் இருக்கும்,

இந்த வயசுல தேவையா? கணவர் அந்த விஷயத்திற்கு ஒத்துக்கல..நடிகை சந்தோஷி ஓபன் டாக்! | Serial Actress Santhoshi Shares Her Emotinal Story

மீதி 20 நாட்கள் வீட்டில் இருந்து கொண்டு எல்லா வேலையையும் செய்ய வேண்டும், குழந்தைகளை பார்க்க வேண்டும், அது மட்டுமில்லாமல் அடுத்து எப்போ ஷூட்டிங் என்று எதிர்பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும். இதனால், எனக்கு பிடித்த இந்த வேலையை நான் செய்கிறேன்.

என் குடும்பத்தில் இதற்கு பலர் ஆதரவு தெரிவித்தார்கள். ஆனால், வெளியில் இருக்கும் சிலர், இந்த வயசுல இது தேவையா என்று கேட்கிறார்கள். வீட்டில் இருப்பவர்களுக்கு நம்மை புரிந்து கொண்டால் போதும்,

வெளியில் இருப்பவர்கள் பற்றி எனக்கு எந்த கவலையும் இல்லை. என்னை பொருத்தவரையும் மேக்கப்போடுவதும் ஒரு வேலை தான், அதிலும் நம் உழைப்பை கொடுக்கிறோம் என கூறினார்.