TTF வாசனோடு கல்யாணம்; உண்மை உடைத்த சீரியல் நடிகை - வைரலாகும் இன்விடேஷன்!
TTF வாசனோடு திருமணம் குறித்த வதந்திக்கு நடிகை சங்கீதா முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
TTF வாசன்
நடிகை சங்கீதா விஜய் டிவியில் சமீபத்தில் முடிவடைந்த ராஜா ராணி சீசன் 2 சீரியலில் நடித்திருந்தார். தொடர்ந்து, தமிழும் சரஸ்வதியும் சீரியலிலும் நடித்து வருகிறார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர் அவ்வப்போது புகைப்படங்களையும், வீடியோக்களையும் பகிர்ந்து வருவார்.
இந்நிலையில், யூடியூபர் மற்றும் பைக்கர் டிடிஎஃப் வாசனின் வீடியோக்களை பகிர்வார். இவரது அண்ணன் வாசனின் நெருங்கிய நண்பர். அதனால், இருவரும் காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்பட்டது. தொடர்ந்து, திருமண இன்விடேஷன் ஒன்றை சங்கீதா வெளியிட்டிருந்தார்.
திருமணம்
அதில் V என்ற பெயரில் மணமகன் பெயரும் கீழே சங்கீதா என்று இவருடைய பெயரும் இருந்தது. இதனால் அது வாசனாகத்தான் இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். இந்த செய்தி வைரலான நிலையில் சங்கீதா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதற்கு விளக்கம் கொடுத்துள்ளார்.
அதில், நான் கல்யாணம் செய்ய போகும் கணவரின் பெயர் விக்னேஷ் எங்களுக்கு ஆகஸ்ட் 20ஆம் தேதி 2023 அன்று திருமணம் நடக்கப்போகிறது. அதோடு வாசன் எனக்கு அண்ணன்தான். அதனால உண்மை எது என்று தெரியாமல் தவறாக செய்திகளை பரப்பாதீர்கள் எனத் தெரிவித்துள்ளார்.