ப்ரொஃபைலில் கூட அட்ஜஸ்ட்மென்ட்க்கு எஸ், நோ ஆப்ஷன் - அவ்வளவு ஓபனா.. பிரபல நடிகை வேதனை!
அட்ஜஸ்ட்மென்ட் குறித்து நடிகை ரேஷ்மா பிரசாத் வேதனை தெரிவித்துள்ளார்.
ரேஷ்மா பிரசாத்
நடிகை ரேஷ்மா பிரசாத் விஜய் டிவியில் சக்திவேல் என்ற சீரியலில் மீனா என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். வெற்றிகரமாக முடிவடைந்த பாரதி கண்ணம்மா 2 தொடரிலும் நடித்திருந்தார்.
மேலும், இவர் நடித்த நான் பிழை நீ மழலை என்ற ஷார்ட் பிலிம் மூலம் தான் மிகப் பிரபலமானார். இந்நிலையில் இவர் அளித்த பேட்டி ஒன்றில், ஒரு சின்ன கேரக்டர் ரோலாக இருந்தாலும் கூட அட்ஜஸ்ட்மென்ட்க்கு ஓகேவா என்று ஓப்பனாக கேட்கிறார்கள். எங்கு போனாலும் இதே கேள்வியைத்தான் முதலில் கேட்கிறார்கள்.
அட்ஜஸ்ட்மென்ட்
இதனால் ஒரு கட்டத்தில் நான் ஆடிசனுக்கே போக வேண்டாம் என்று முடிவு எடுத்துவிட்டேன். அதுமட்டுமில்லாமல் ப்ரோபைலில் கூட அட்ஜஸ்ட்மென்ட்க்கு எஸ், நோ என்று ஆப்ஷனல் எல்லாம் வைத்து இருக்கிறார்கள். நான் நோ என்று அனுப்பிய பிறகும், அந்த ப்ரோபைலை கூட படித்துப் பார்க்காமல் கால் செய்து அட்ஜஸ்ட்மென்ட் ஓகேவா என்று கேட்கிறார்கள்.
இந்த அளவிற்கு மோசமான பல சம்பவங்களை நான் பார்த்திருக்கிறேன் என வேதனை தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், அதிமுக முன்னாள் நிர்வாகி ஏவி ராஜு, நடிகை த்ரிஷா குறித்தும் மற்ற நடிகைகள் குறித்தும் மோசமாக பேசி இருந்தார். இது சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.