நடிகை பாவனி திடீரென மருத்துவமனையில் அட்மிட், என்னாச்சு? - பதறும் ரசிகர்கள்!

Tamil Cinema Pavani Reddy
By Vinothini Jul 06, 2023 07:12 AM GMT
Report

சீரியல் நடிகை பாவனி திடீரென மருத்துவமனையில் அட்மிட் ஆனதால் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

நடிகை பாவனி

விஜய் டிவியில் ஒளிபரப்பான சின்னத்தம்பி சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை பாவனி ரெட்டி. இவர் இந்த சீரியலுக்கு பிறகு பெரிதளவு அறியப்படாமல் இருந்தார். பின்னர், இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார், அதனால் பல ரசிகர்களை கவர்ந்தார்.

serial-actress-pavani-reddy-admitted-in-hospital

மேலும், இவர் அந்த ஷோவில் பங்கேற்ற டான்ஸ் மாஸ்டர் அமீருடன் பழகி வந்தார். இருவரும் காதலிப்பதாக தகவல் வெளியானது ஆனால் அவர்கள் அதிகாரபூர்வமாக தெரிவிக்காமல் இருந்தனர். அதன்பிறகு, பிக் பாஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் ஒன்றாக அமீரோடு டான்ஸ் ஆடி அதில் டைட்டில் வெற்றி பெற்றதும் தன்னுடைய காதலை இணையத்தில் அனைவருக்கும் தெரிவித்திருந்தார்.

மருத்துவமனையில் அட்மிட்

இந்நிலையில், தற்பொழுது பாவனி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மருத்துவமனையில் அட்மிட்டாகி இருப்பது போல கையில் டிரிப்ஸ் போடப்பட்ட புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

மேலும், இவருக்கு என்னாச்சு? என்று பலரும் கேட்டு வருகின்றனர். தற்பொழுது இவருக்கு கழுத்தில் வலி ஏற்பட்டது என்றும், இதன் காரணமாக 15 நாட்களாக ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.