விவாகரத்தாகி 3 வருடம்; காதலரை அறிமுகப்படுத்திய நடிகை - குவியும் விமர்சனங்கள்!
நடிகை நிவேதிதா தனது காதலரை அறிமுகப்படுத்தியுள்ளார்.
நடிகை நிவேதிதா
சன் டிவியில் ஒளிபரப்பான 'திருமகள்' தொடரில் பிரகதி என்கிற கதாபாத்திரத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை நிவேதிதா. இவரும் இந்தத் தொடரின் கதாநாயகன் சுரேந்தரும் காதலிப்பதாக செய்திகள் வெளியான வண்ணம் இருந்தன.

இருவரும் சேர்ந்து ரீல்ஸ்களும் பதிவிட்டு வந்தனர். ஆனால், 'மகராசி' தொடரில் நடித்திருந்த எஸ்.எஸ்.ஆர்யனும், நிவேதிதாவும் கணவன் - மனைவி என்பதால் இதுகுறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தது.
வைரல் பதிவு
தொடர்ந்து, தற்போது நிவேதிதாவும், சுரேந்தரும் ஜோடியாகச் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. இதற்கு பலர் அவரது திருமணம் குறித்து கடுமையான கேள்விகளை முன்வைத்து வருகின்றனர். இந்நிலையில் இதற்கு பதிலளித்துள்ள நிவேதிதா, "எனக்கு விவாகரத்தாகி மூன்று ஆண்டுகள் ஆகின்றன.

நான் என் காதலைக் கண்டுபிடித்து விட்டேன். எனக்கு ஸ்பெஷலான ஒருவருடன் மகிழ்ச்சியாக வாழ்க்கையின் அடுத்தக்கட்டத்திற்கு முன்னேறிக் கொண்டிருக்கிறேன்.
உங்களுடைய ஆர்வத்தை நான் பாராட்டுகிறேன். இந்த நேரத்தில் உங்களுடைய புரிதலையும், மரியாதையையும் அன்புடன் வேண்டிக் கொள்கிறேன். தயவுசெய்து அநாகரீகமான கேள்விகள் கேட்பதைத் தவிர்க்கவும்!" எனக் குறிப்பிட்டுள்ளார்.
Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan
ட்ரம்பின் மிரட்டலுக்கு பதிலடி...! அமெரிக்காவிற்கு ஈரான் விடுத்துள்ள நேரடிப் போர் எச்சரிக்கை IBC Tamil