பிரபல யூடியூபரை கரம் பிடித்த சீரியல் நடிகை, வைரலாகும் புகைப்படம் - ரசிகர்கள் வாழ்த்து!
சீரியல் நடிகை ஜனனி யூடியூபரை திருமணம் செய்துகொண்டார், இது தற்பொழுது வைரலாகி வருகிறது.
பிரபல நடிகை
தமிழ் சினிமாவில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘கண்மணி’ என்ற சீரியல் மற்றும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘சிவா மனசுல சக்தி’ ஆகிய தொடர்களில் நடித்தவர் ஜனனி பிரதீப். இவர் தன்னுடன் ஆல்பம் பாடலில் நடித்த யூடியூப் பிரபலமான இனியன் என்பவரை நீண்ட நாட்களாக காதலித்து வந்தார்.

வித்யா நம்பர் ஒன் என்கிற சீரியலில் சஞ்சய் என்கிற கதாபாத்திரத்தில் நடித்தவர் ஆவார். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான முரட்டு சிங்கிள்ஸ் என்கிற ரியாலிட்டி ஷோவில் போட்டியாளராக கலந்துகொண்டார்.
திருமணம்
இந்நிலையில், இருவரும் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜோடியாக எடுத்த புகைப்படங்களை பதிவிட்டு வந்தனர், இவர்கள் கடந்த மாதம் தான் தங்களது காதலை அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். அறிவித்த ஒரே மாதத்தில் அந்த ஜோடி திருமணமும் செய்துகொண்டுள்ளது.

இனியன் - ஜனனி பிரதீப் ஜோடியின் திருமணம் இன்று கோலாகலமாக நடைபெற்று முடிந்துள்ளது. இதற்கு பல சின்னத்திரை நடிகர் நடிகைகள் வந்திருந்தனர், தற்பொழுது இவர்களது திருமண புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும், இவர்களது ரசிகர்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
ருஹுனு பல்கலைக்கழகத்தில் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல் : மாற்றியமைக்கப்பட்ட கற்றல் செயற்பாடு IBC Tamil
மரணத்திற்கு அஞ்சாமல் விமானத்தை மோதச் செய்ய விரும்பினேன்: ஃப்ளைதுபாய் துணை விமானி பரபரப்பு வாக்குமூலம் IBC Tamil