எனக்கு அந்த பிரச்சனை இருந்தது!! அதான் 43 வயசு வரை கல்யாணம் ஆகல - போட்டுடைத்த லாவண்யா தேவி
பிரபல சின்னத்திரை நடிகை லாவண்யா தேவி தனது 43 வயதில் திருமணம் செய்து கொண்டதை குறித்து பேசியுள்ளார்.
லாவண்யா தேவி
சின்னத்திரையில் பிரபலமாக இருக்கும் பலரை நமக்கு முகம் தெரியுமே தவிர, அவர்களின் பெயர் கூட நம்மில் பலருக்கு தெரிவதில்லை. அப்படி தமிழ் சின்னத்துரையில் பிரபலமாக இருக்கும் நடிகை லாவண்யா தேவி.பல திரைப்படங்கள், சின்னத்திரை தொடர்களில் நடித்துள்ள இவர்,தற்போதும் திரையில் மும்முரமாக இயங்கி வருகின்றார்.
கடந்த 1997-ஆம் ஆண்டு வெளியான சூரியவம்சம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான லாவண்யா தேவி, அதனை தொடர்ந்து படையப்பா, சேது, தெனாலி, சுந்தரா டிராவல்ஸ் என சுமார் 50'இருக்கும் மேற்பட்ட படங்களில் சிறு சிறு துணை காதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
சின்னத்திரையில் பிஸியான நடிகையாக இருக்கும் இவர், அருவி தொடரில் தற்போது முக்கிய பாத்திரத்தில் நடித்து வருகின்றார். இவர் தன்னுடைய திருமணம் குறித்து பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.
அந்த பிரச்சனை
அதில், 43 வயது வரை தான் திருமணம் செய்து கொள்ளாததற்கு காரணம் குடும்ப சூழ்நிலைதான் என்றும் எனக்கு பெரிய அளவில் வருமானம் இல்லாததால் அடுத்தடுத்த வேலைகளிலேயே கவனத்தை செலுத்திக் கொண்டிருந்ததாக கூறினார்.
அவருக்கு குடும்பம் பெரும் பக்கபலமாக இருந்ததாக தெரிவித்த லாவண்யா தேவி, தனது கணவரை ஒரு திருமண நிகழ்ச்சியில் தான் முதல் முறை சந்தித்தாக கூறி, நட்பாகத் தொடங்கி பந்தம் காதலாகி தற்போது கல்யாணத்தில் முடிந்தது என பேசியுள்ளார்.