அது பண்ணதும் பட வாய்ப்பு வந்துச்சு; இப்போ எனக்கு Divorce ஆயிருச்சு - நடிகை கிருத்திகா வேதனை!
தனது வாழக்கையில் நடந்த கசப்பான அனுபவங்கள் குறித்து நடிகை கிருத்திகா பேசியுள்ளார்
நடிகை கிருத்திகா
மெட்டி ஒலி சீரியல் மூலம் சின்னதிரையில் அறிமுகமானவர் நடிகை கிருத்திகா. தொடர்ந்து பல சீரியல்களில் நடித்த இவர், தனது வில்லத்தனமான நடிப்பால் மக்களை மனதில் இடம்பிடித்தார்.
தற்போது பாண்டவர் இல்லம் என்ற தொடரில் கிருத்திகா நடித்து வருகிறார். மேலும், ஒருகாலத்தில் பிரபல நடன நிகழ்ச்சியாக இருந்த 'மானாட மயிலாட' நிகழ்ச்சியிலும் பங்கேற்றுள்ளார்.
பின்னர் திருமணம் செய்துகொண்ட கிருத்திகாவுக்கு ஒரு மகனும் உள்ளார். சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட கிருத்திகா தனது வாழக்கையில் நடந்த கசப்பான அனுபவங்கள் குறித்து பேசியுள்ளார்.
பேட்டி
அவர் பேசியதாவது " நான் மானாட மயிலாட பண்ணதுக்கு அப்பறம், எனக்கு நிறைய பட வாய்ப்புகள் வந்தது. ஆனால் நிகழ்ச்சி முடிஞ்சதும் வீட்டில் கல்யாணம் பண்ணி வைக்கணும்னு ஒரு ஐடியால இருந்தாங்க.
அதனால் படங்களில் நடிக்க முடியாம போயிருச்சு. திருமணம் ஆனதுக்கு அப்பறம் பையன் பொறந்துட்டான். அவனை பார்த்துக்க வேண்டிய ஒரு சூழ்நிலை வந்துருச்சு. அதனால் படங்களில் நடிக்க முடியாம போயிருச்சு" என்றார்.
மேலும் பேசிய அவர் "இப்போ எனக்கு விவாகரத்து ஆயிருச்சு. இப்போ நான், அம்மா, அண்ணன் எல்லோருமே ஒன்னா இருக்கோம். இது பெருசா யாருக்கும் தெரியாது. இதை பெருசாக்கவும் நான் விரும்பல" என்று பேசியுள்ளார்.