2 அபார்ஷன்; 10 வருட ஏக்கம் - இப்போ 42 வயசுல கர்ப்பமா இருக்கேன் - நடிகை ஜூலி எமோஷனல்!

Tamil TV Serials
By Sumathi Apr 26, 2024 02:30 PM GMT
Report

வாழ்க்கை சம்பவங்கள் குறித்து நடிகை ஜூலி மனம் திறந்துள்ளார்.

நடிகை ஜூலி

சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் என்று பல சேனல்களில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் நடித்திருப்பவர் நடிகை ஜூலி. தற்போது கர்ப்பமாக இருக்கும் நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில்,

serial actress julie with husband

நான் இப்போது கர்ப்பமாக இருக்கிறேன். இந்த குழந்தை எங்க ரெண்டு பேருக்கும் ரொம்பவே ஸ்பெஷல். ஏன்னா திருமணம் ஆகி பத்து வருஷம் ஆயிடுச்சு நான் முதல்முறையாக கர்ப்பமானேன்.

அது அபார்ட் ஆயிடுச்சு இரண்டாவது முறையாக கர்ப்பமான போது கர்ப்பப்பை டியூப்பில் பேபி பார்ம் ஆனதால அபார்ட் பண்ண வேண்டியது ஆயிடுச்சு. இப்ப மூன்றாவது முறையா கர்ப்பமா இருக்கிறேன். இதற்கான டெஸ்ட் எடுத்து கொடுத்துட்டு ரிசல்ட் வர்ற வரைக்கும் நாங்க ரெண்டு பேருமே ரொம்ப பயந்துட்டு தான் இருந்தோம்.

‘ஓ... சொல்றியா மாமா....’ பாடலுக்கு கடற்கரையில் கவர்ச்சியில் கிறங்கடித்த பிக்பாஸ் ஜூலி

‘ஓ... சொல்றியா மாமா....’ பாடலுக்கு கடற்கரையில் கவர்ச்சியில் கிறங்கடித்த பிக்பாஸ் ஜூலி

எமோஷனல் பேட்டி

பிறகு ரிசல்ட்டில் குழந்தைதான்னு கன்ஃபார்ம் பண்ணினதும் ஹாஸ்பிடலே அழுதுட்டேன். என்னுடைய கணவருடைய ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் குழந்தையோடு இருக்கும்போது இவர் மட்டும் தனியா நிற்கிறப்ப எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும்.

2 அபார்ஷன்; 10 வருட ஏக்கம் - இப்போ 42 வயசுல கர்ப்பமா இருக்கேன் - நடிகை ஜூலி எமோஷனல்! | Serial Actress Julie Pregnant At Age 42 Emotional

எனக்கு இப்போ 42 வயது ஆகிடுச்சு. அதனால நான் எல்லாருக்கும் ஒரே ஒரு அட்வைஸ் தான் சொல்லுவேன். சீக்கிரமா கல்யாணம் பண்ணிக்கிட்டா சீக்கிரமே குழந்தையை பெற்றுக் கொள்ளுங்கள்.

வேலை எப்போ வேணாலும் கிடைக்கும். அதுக்காக எல்லாம் குழந்தை பிறப்பை தள்ளி போடாதீங்க என உருக்கமாக பேசியுள்ளார்.