மார்பகத்தில் கட்டி; வலி தாங்க முடியல - மருத்துவமனையில் பிரபல சீரியல் நடிகை!

Serials
By Sumathi 2 வாரங்கள் முன்

சீரியல் நடிகை ஹேமா வெளியிட்டுள்ள வீடியோ பதிவு வைரலாகி வருகிறது.

 ஹேமா ராஜ்குமார்

விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் பிரபலமானவர் ஹேமா ராஜ்குமார். நடிப்பு மட்டுமல்லாமல் சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் ஹேமா அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.

மார்பகத்தில் கட்டி; வலி தாங்க முடியல - மருத்துவமனையில் பிரபல சீரியல் நடிகை! | Serial Actress Hema Rajkumar Hospital Video Viral

அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவு ஒன்றில், தான் மருத்துவமனையில் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு மார்பகத்தில் கட்டி இருந்ததற்காக ஆப்ரேஷன் நடந்துது. அதன்பிறகு வழக்கமாக செக்கப்க்கு ஹாஸ்பிடலுக்கு போய் வந்தேன்.

ஆப்ரேஷன்

ஆனால் 3 மாதங்களுக்கு பிறகு போக வேண்டிய செக்கப்புக்கு நான் போகவில்லை. அப்போது எனக்கு அது பெரிதாக எதுவும் தெரியவில்லை. ஆனால்கடந்த சில தினங்களாக ஆப்ரேஷன் செய்த இடத்தில் வலி இருக்கிறது.

ஆப்ரேஷன் செய்த பிறகு கட்டி இருந்த இடம் காலியாக இருந்ததாகவும் வேஸ்ட் வைத்து பில் செய்து தையல் போட்டுள்ளதாகவும் டாக்டர்கள் கூறினார்கள். ஆனால் இப்போது வலி அதிகமாக இருப்பதால் டாக்டரிடம் செல்லலாம் என்று முடிவு செய்துவிட்டேன். ஹார்மோன் சேஞ்ஜ் காரணமாக இந்த வலி வந்ததாகவும்

மற்றபடி பயப்படும் அளவுக்கு ஒன்றும் இல்லை என்றும் சொன்னார்கள். இப்போது தான் நிம்மதியாக உள்ளது. உங்களுக்கும் இப்படி எதாவது உடலில் பிரச்னை இருந்தால் உடனடியாக டாக்டரிடம் சென்று பரிசோதனை செய்துகொள்ளுங்கள் எனத் தெரிவித்துள்ளார்.