சேட்டுக்கு வேட்டு வைத்த சின்னத்திரை பிரபலம் - போலி நகைகளை கொடுத்து ஏமாற்றியது அம்பலம்

Tamil Cinema Chennai Tamil Nadu Police
By Thahir Mar 01, 2023 10:50 AM GMT
Report

சென்னையில் போலி நகைகளை கொடுத்து ஏமாற்றிய சின்னத்திரை நடிகையை போலீசார் கைது செய்துள்ளனர்.

செண்டிமெண்டாக பேசி சேட்டை நம்ப வைத்த சின்னத்திரை நடிகை 

சென்னை பெரம்பூர் பட்டேல் ரோடு பகுதியில் கண்ணைய்யா லால் ஜெயின் என்பவர் அடகு கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி பெண் ஒருவர் நகைகளை அடகு வைக்க வந்துள்ளார்.

மருத்துவ தேவை அவசரமாக பணம் வேண்டும் என்பதால் தாலியில் உள்ள குண்டுகளை அடமானம் வைத்துள்ளார்.

அப்போது கண்ணைய்யா லால் ஜெயின் அடகு வைக்க கொடுக்கப்பட்ட தங்க குண்டுகளை உரசி பார்க்க முயன்ற போது அந்த பெண் தங்க நகை குண்டை உரசி பார்த்தால் சேதாரமாகிவிடும் என கூறி செண்டிமெண்டாக பேசியுள்ளார்.

serial-actress-cheats-gold-loan-shop

இதை நம்பிய அந்த அந்த அடகுகடை உரிமையாளர் ஆதார் கார்டு நகர் கொடுக்குமாறு கேட்கும் போது நாளை எடுத்து வருவதாக கூறியுள்ளார்.

40 ஆயிரம் ரூபாய் கேட்ட நிலையில், அடகு கடைக்காரர் 20 ஆயிரம் ரூபாய் மட்டும் கொடுத்துள்ளார். மீதமுள்ள 20 ஆயிரம் ரூபாயை ஆதார் கார்டு நகலை கொடுத்துவிட்டு வாங்கி செல்லுமாறு கூறியுள்ளார்.

இதனையடுத்து பணத்தை வாங்கி சென்ற பெண், மறுநாள் ஆதார் கார்டு எடுத்து வரவில்லை.கண்ணையா லால் ஜெயினுக்கு சந்தேகம் ஏற்பட்ட நிலையில் நகையை சோதனை செய்து பார்க்க போது அது போலி நகை என தெரியவந்துள்ளது.

மற்றொரு சேட்டுக்கும் ஆப்பு 

உடனடியாக செம்பியம் காவல் நிலையத்தில் கண்ணையா லால் ஜெயின் புகார் அளித்துள்ளார். புகார் அளித்ததோடு மட்டுமல்லாமல் அடகு கடை உரிமையாளர்கள் வைத்திருக்கும் வாட்ஸ் அப் குரூப்பில் தனது அடகு கடை மோசடி செய்த பெண்ணின் சிசிடிவி காட்சியை பகிர்ந்து எச்சரிக்கையாக இருங்கள் என்று பதிவிட்டுள்ளார்.

இதையடுத்து அந்த வாட்ஸ் அப் குரூப்பில் உள்ள சென்னை அரும்பாக்கம் எம்எம்டிஏ காலணி பகுதியைச் சேர்ந்த அடகு கடை உரிமையாளர் சுரேந்தர்குமாருக்கு (52) தனது அடகு கடையிலும் இதே போன்று ஒரு வாரத்துக்கு முன்பு பெண் ஒருவர் நகை அடகு கடை வைத்து சென்றது நியாபகம் வந்துள்ளது.

கடைக்கு வந்த பெண் 7 கிராம் தங்க நகைகளை அடகு வைத்து 22 ஆயிரம் ரூபாய் பணத்தை பெற்று சென்ற நிலையில், பெண் கொடுத்த நகையை சந்தேகத்தில் சோதனை செய்த போது அது போலி நகை என்பதை அறிந்து அதிர்ச்சியடைந்துள்ளார்.

எச்சரித்து அனுப்பிய நீதிபதி 

அடகு கடை உரிமையாளர் சுரேந்தர் இது குறித்து அரும்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவயிடத்தில் பதிவான சிசிடிவி காட்சிகளை வைத்து மோசடி செய்த பெண்ணை கண்டுபிடித்த போலீசார் அவரை கைது செய்தனர்.

பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில் கீழ்பாக்கம் ஏ.கே நகரை சேர்ந்த மகாலட்சுமி (33) என்பதும் இவர் ஒராண்டு முன்பு ஓமந்தூரார் மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் டைப்பிஸ்டாக வேலை செய்து வந்ததும் தெரியவந்தது. மகாலட்சுமி தொடர்ந்து இதுபோன்று மோசடி சம்பவங்களில் ஈடுபட்டு வந்தது தெரியவந்துள்ளது.

விசாரணைக்கு பிறகு அரும்பாக்கம் போலிசார் எழும்பூர் 5 வது கூடுதல் நீதிமன்றத்தில் மகாலட்சுமியை ஆஜர் படுத்தினர். மகாலட்சுமியின் வாக்குமூலத்தை படித்த நீதிபதி, மகனின் படிப்புக்காக மோசடி செய்ததை ஒப்புக்கொண்டதால் அதன் அடிப்படையில் மகாலட்சுமியை எச்சரித்து மட்டும் அனுப்பியுள்ளனர். இதையடுத்து அவரை போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.