அட்ஜஸ்ட்மென்ட் கேட்டார்..பேமெண்ட் குறைவா இருந்தா கூட பண்ணலாம்னு சொன்னேன் - நடிகை பரணி ஓபன் டாக்!
சீரியல் நடிகை பரணி இளங்கோவன் அடஜஸ்ட்மென்ட் பிரச்சனை குறித்து பேசியுள்ளார்.
பரணி இளங்கோவன்
பிரபல தமிழ் தொலைக்காட்சியான சன் டிவியில் ஒளிபரப்பான 'சந்திரலேகா' என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார் பரணி இளங்கோவன். அதன் பின் சன் டிவியில் ஒளிபரப்பான 'கண்மணி' என்ற சீரியலில் "சரண்யா குமரேசன்" என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களில் மத்தியில் பிரபலம் அடைந்தார்.

மேலும் தொகுப்பாளினியாகவும், மாடலாகவும் இருந்து வருகிறார் பரணி. விஜய் டிவியில் 'தென்றல் வந்து என்னை தொடும்' என்ற சீரியலில் நடித்தார். இந்த தொடரில் வினோத் பாபு, பவித்ரா ஜனனி முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்கள். இதன் இரண்டாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது.
இன்ஸ்ட்டாகிராமில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் பரணி, விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு இன்ஸ்டாவை கலக்கி வருகிறார். அண்மையில் பிரபல யூடியூப் சானெல் ஒன்றுக்கு பரணி பேட்டியளித்திருந்தார். அதில் அவரிடம் அடஜஸ்ட்மென்ட் பிரச்சனை குறித்த கேள்வி கேட்கப்பட்டது.
பேட்டி
அதற்கு பதிலளித்த பரணி இளங்கோவன் "எனக்கு போன் பண்ணி ஒரு பிராஜக்ட் இருக்கு, ஆனால் நீங்கள் அட்ஜஸ்ட்மென்ட் பண்ணனும்' அப்படீன்னு கேப்பாங்க. அப்போது நான் 'இல்ல சார் யாரோ தப்பா சொல்லீருக்காங்க, நான் அப்படி பண்றது கிடையாது.

நீங்க ஏதாவது கேரக்டர் ரோல் இருந்தா சொல்லுங்க. ஏதாவது சின்ன ரோலா இருந்தா கூட பரவால்ல, அட்ஜஸ்ட்மென்ட் இல்லாம பேமெண்ட் கம்மியா இருந்தா கூட நம்ம பண்ணலாம் சார் என்று சொன்னேன். அதற்கு அவர் "அப்படியா.. இல்ல நீங்க பண்ணுவீங்கன்னு சொன்னாங்க" என்று கூறினார்.
அப்போது நான் "அப்படியா சார், உங்ககிட்ட யாரு சொன்னாங்கன்னு எனக்கு தெரியாது. ஆனா அவங்ககிட்டல்லாம் விளக்கம் சொல்லணும்னு எனக்கு அவசியம் கிடையாது என்று சொன்னேன்' என்று பரணி இளங்கோவன் பேசியுள்ளார்.
தியாக தீபம் திலீபனின் ஆவண காப்பக நிதித்திரட்டல்! சிலை விவகாரத்தில் காவல்துறை எழுப்பிய கேள்வி IBC Tamil