முதியவரை தனியாக அறைக்கு அழைத்து நிர்வாணமாக்கி புகைப்படம் எடுத்த சீரியல் நடிகை - 11 லட்சம் பறிப்பு..!

Kerala
By Thahir Jul 29, 2023 06:02 AM GMT
Report

முதியவரை தனியாக அறைக்கு வர வழைத்து நிர்வாணமாக்கி புகைப்படம் எடுத்து மிரட்டி ரூ.11 லட்சம் பணம் பறித்த சீரியல் நடிகை மற்றும் அவருடைய ஆண் நண்பரை போலீசார் கைது செய்துள்ளனர்.

முதியவருக்கு ஆசை காட்டிய சீரியல் நடிகை 

கேரளா மாநிலம் திருவனந்தபுரம் பட்டம் பகுதியைச் சேர்ந்தவர் முன்னாள் ராணுவ வீரரும், கேரளா பல்கலைக்கழக ஊழியருமான 75 வயது முதியவர் ஒருவர் கொல்லம் பரவூரில் உள்ள தனது வீட்டை வாடகைக்கு விட இருப்பதாக விளம்பரம் செய்திருந்தார்.

அதில் குறிப்பிடப்பட்டிருந்த செல்போன் எண்ணை பார்த்து கடந்த மே மாதம் அவரிடம் ஒரு பெண் பேசியிருக்கிறார்.

அப்போது அந்த பெண் தனக்கு வீடு வாடகைக்கு வேண்டும் என்று அந்த முதியவரிடம் கூறியிருக்கிறார். இதையடுத்து வீடு வாடகை தொடர்பாக பல முறை அந்த முதியவரிடம் அடிக்கடி பேசி வந்துள்ளார்.

மேலும் அந்த முதியவருக்கு தன் மேல் ஆசை ஏற்படும் வகையில் பேசியிருக்கிறார். மேலும் கொல்லம் பரவூரில் உள்ள வீட்டில் தனியாக சந்திக்க வேண்டும் என்றும் இருவரும் உல்லாசமாக இருக்கலாம் என்றும் அந்த பெண் முதியவரிடம் தெரிவித்துள்ளார்.

ரூ.11 லட்சம் பணம் பறிப்பு 

இதனால் சபலமடைந்த முதியவர், அந்த பெண்ணை தனியாக சந்திக்க சென்றிருக்கிறார். அப்போது இந்த பெண் முதியவரை நிர்வாணமாக்கி சேர்ந்து நின்று புகைப்படம் எடுத்துள்ளார்.

Serial actress arrested for threatening old man

அப்போது அங்கு அந்த பெண்ணின் ஆண் நண்பர் ஒருவர் வந்துள்ளார். அவர் அங்கு நிர்வாணமாக நின்ற முதியவரை மிரட்டி போட்டோ மற்றும் வீடியோ எடுத்துள்ளனர்.

இந்த வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிடுவோம் என்றும் மிரட்டியுள்ளனர். தனது நிர்வாண போட்டோ மற்றும் வீடியோ வெளியாகினால் அவமானமாகிவிடும் என்று கருதிய முதியவர் ரூ.11 லட்சம் கொடுத்துள்ளார்.

அதை வாங்கி கொண்ட அவர்கள், மேலும் ரூ.25 லட்சம் ரூபாய் வேண்டும் என்றும் , இல்லை என்றால் நிர்வாண போட்டோ மற்றும் வீடியோவை சமூக வலைத்தளத்தில் பதிவிடுவோம் என்று கூறி மிரட்டியுள்ளனர்.

மிரட்டிய நடிகை கைது 

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த முதியவர் இது பற்றி போலீசில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் முதியவரிடம் நுாதனமாக பணம் பறித்து மிரட்டடியவர்கள் பற்றி போலீசார் ரகசியமாக விசாரணை நடத்தினர்.

விசாரணை நடத்தியதில் பத்தினம்திட்டா மாவட்டம் மலையாலப்புழா பகுதியைச் சேர்ந்த டி.வி.சீரியல் நடிகை நித்யா சசி மற்றும் கொல்லம் பரவூரை சேர்ந்த பினு என்பது தெரியவந்தது.

பணம் பறித்த நபர்களை பிடிக்க திட்டம் போட்ட போலீசார் அந்த பெண் மற்றும் அவரின் ஆண் நண்பரிடம் பணம் தயாராகிவிட்டதாகவும், வாங்க வருமாறும் தெரிவிக்க வைத்தனர். அவர்கள் 2 பேரும் முதியவர் அழைத்த இடத்துக்கு வந்துள்ளனர்.

அப்போது மறைந்து இருந்த போலீசார் சீரியல் நடிகை மற்றும் அவரது ஆண் நண்பரை மடக்கி பிடித்தனர். முதியவரை மிரட்டி பணம் பறித்த சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.