‘சிப்பிக்குள் முத்து’ சீரியல் நடிகருக்கு திருமணம் - பெண் இந்த நடிகையா?

Chennai Serials Marriage Tamil TV Serials
By Thahir Mar 05, 2023 10:43 AM GMT
Report

விஜய் டிவியில் ஒளிப்பரப்பான சிப்பிக்குள் முத்து என்ற சீரியல் நடிகர் விஷ்ணுகாந்த் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சிரியல் நடிகர் திருமணம் 

விஜய் டிவியில் ஒளிப்பரப்பான ‘சிப்பிக்குள் முத்து’ என்ற சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகர் விஷ்ணுகாந்த். இவர் கடந்த சில வருடங்களாக நடிகை சமயுக்தாவை காதலித்து வந்த நிலையில் நேற்று முன் தினம் திருமணம் செய்து கொண்டனர்.

திருமணம் புகைப்படங்களை நடிகர் விஷ்ணுகாந்த் தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்த நிலையில் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

[‘சிப்பிக்குள் முத்து’ சீரியல் நடிகருக்கு திருமணம் - பெண் இந்த நடிகையா? | Serial Actor Vishnukanth Marriage]

‘சிப்பிக்குள் முத்து’ என்ற சீரியலில் இருவரும் இணைந்து நடித்த போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது.

இதை தொடர்ந்து இருவரும் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்துள்ளனர்.இந்த நிலையில் இருவரும் பெற்றோர் சம்மதத்துடன் நேற்று முன்தினம் திருமணம் செய்து கொண்டனர்.

குவியும் வாழ்த்து 

விஷ்ணுகாந்த் ஏற்கனவே ஜீ டிவில் ஒளிப்பரப்பான கோகுலத்தில் சீதை உள்ளிட்ட ஒரு சில சீரியல்களில் நடித்துள்ளார். நடிகை சமயுக்தா நிறைமாத நிலவே என்ற வெப் தொடர் மூலம் பிரபலமாகி அதனை அடுத்து சீரியல் சில சீரியல்களில் நடித்துள்ளார்.

இது குறித்து நடிகர் விஷ்ணுகாந்த் உங்கள் அனைவரின் வாழ்த்துக்களோடு நான் ஒரு புதிய வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கிறேன் என்றும் லவ் டி பொண்டாட்டி என்றும் விஷ்ணுகாந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இதனை அடுத்து புதுமண தம்பதிகள் இருவருக்கும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.