பிரபல சின்னத்திரை நடிகரின் மகன் சம்பவ இடத்திலேயே பலி - கார் மோதி பயங்கர விபத்து!
கார் விபத்தில் சின்னத்திரை நடிகர் கார்த்திக்கின் மகன் உயிரிழந்தார்.
நடிகர் கார்த்திக்
சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தை சேர்ந்தவர் சின்னத்திரை நடிகர் கார்த்திக். இவரது மகன் நித்திஷ். தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்துவந்துள்ளார்.

இந்நிலையில், தனது நண்பர்களுடன் ஓஎம்ஆர் சாலையில் உள்ள விளையாட்டுத் திடலுக்கு காரில் சென்றுள்ளார். அங்கு விளையாடி முடித்துவிட்டு, காரில் வீடு திரும்பியுள்ளார்.
மகன் பலி
அப்போது, வேளச்சேரி பகுதியில் கார் வேகமாக வந்து கொண்டிருந்தபோது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து, சாலை நடுவே உள்ள தடுப்புச் சுவரில்மோதி விபத்துக்குள்ளானது. இதில் நித்திஷ் மற்றும் அவரது நண்பர்கள் படுகாயம் அடைந்தனர்.

அவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு நித்திஷை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
தற்போது, போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டமூலத்திற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் சுதந்திர ஊடக இயக்கம் மனுத் தாக்கல் IBC Tamil