சூர்யா படத்தை நாரடித்து.. புருஷனுக்கு பொத்துட்டு வந்துடும்.. முடிஞ்சத பண்ணு -நடிகர் தாக்கு!
சூர்யாவின் படத்தை தொடர்ந்து நாரடிப்போம் என்று பிரபல சீரியல் நடிகர் ரவி சவால் விடுத்துள்ளார்.
சூர்யா
சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்த கங்குவா திரைப்படம் வெளியாகி கடுமையாக விமர்சனங்களை பெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து ஜோதிகா,இதனை சூர்யாவின் மனைவியாக எழுதவில்லை. சினிமா ரசிகையாகவும், ஜோதிகாவாகவும் எழுதுகிறேன்.
நடிகராக இருப்பதற்காகவும், சினிமாவை முன்னோக்கி அழைத்து செல்ல கனவு காண்பதற்காகவும் சூர்யாவை நினைத்து பெருமையாக இருக்கிறது. முழுமையான மூன்று மணி நேரத்திலிருந்து முதல் அரைமணி நேரம் சரியில்லைதான்.
இருந்தாலும் இது ஒரு முழுமையான சினிமா அனுபவம்" என தனது இன்ஸ்டா பதிவில் குறிப்பிட்டிருந்தார். ஜோதிகாவின் இந்த விமர்சனத்திற்கு சிலர் தங்களுடைய ஆதரவை தெரிவித்திருந்தால், சுசித்ரா போன்ற சில பிரபலங்கள்... கடுமையாக விமர்சனம் செய்திருந்தனர்.
நடிகர் தாக்கு
அந்த வகையில் தற்போது சீரியல் நடிகர் ரவியும் தன்னுடைய பங்குக்கு சூர்யா - ஜோதிகாவை கடுமையாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசியதாவது, சூர்யா படத்தை தொடர்ந்து நாரடிப்போம். தமிழ்நாட்டில் பிறந்து, வாழ்ந்த சூர்யா இங்கு தரமான கல்வி கிடைக்காது என்று,
தன்னுடைய பிள்ளைகளுக்கு தரமான கல்வியை கொடுக்க மும்பைக்கு போனதாக சூர்யாவும் - ஜோதிகாவும் சொல்றாங்க. உங்க பிள்ளைகள் மட்டும் தரமான பள்ளிக்கூடத்தில் படிக்கணும். ஆனால், இங்கு இருக்கிற மாணவர்கள் எக்ஸ்ட்ரா ஒரு மொழியை கத்துக்கிட்டா...
உன் புருஷனுக்கு பொத்துட்டு வந்துடும் என ஜோதிகாவிடம் கேள்வி எழுப்புவது போல் பேசி உள்ளார். அதாவது சூர்யா ஹிந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்ததை இதில் சுட்டிக்காட்டி உள்ள சீரியல் நடிகர் ரவி,
நாங்களும் பண்ணுவோம்.. நாங்களும் செய்வோம்... தொடர்ந்து செய்வோம்... சூர்யா படத்தை தொடர்ந்து நாரடிப்போம், உன்னால முடிஞ்சா என்ன பண்ண முடியுமோ பண்ணிக்கோ போ... என பேசியுள்ளார்