பிரபல சீரியல் நடிகர் தற்கொலை- அதிர்ச்சியில் திரையுலகம்
death
suicide
serial actor
ramesh valiyasala
By Anupriyamkumaresan
மலையாள சீரியல் நடிகர் ரமேஷ் திடீரென தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மலையாள சினிமாவில் நிறைய சீரியல்கள் நடித்து பிரபலமானவர் ரமேஷ் வலியாசலா. 2 நாட்கள் முன்பு படப்பிடிப்பு முடித்துவிட்டு வீடு திரும்பிய நிலையில் இன்று காலை அவரது வீட்டில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், ரமேஷின் சடலத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 2 நாட்கள் முன்பு வரை கலகலப்பாக இருந்த நடிகர், இன்று உயிரிழந்துள்ளதால் திரையுலகினர் பலரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.