மனைவி கொடுத்த பரப்பு புகார் - தலைமறைவான நந்தினி சீரியல் நடிகருக்கு முன்ஜாமீன்!

Jiyath
in பிரபலங்கள்Report this article
2 மாதங்களாக தலைமறைவாக இருந்த சீரியல் நடிகர் ராகுல் ரவிக்கு முன்ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகர் ராகுல் ரவி
நந்தினி என்ற சீரியல் மூலம் அறிமுகமானவர் மலையாள நடிகர் ராகுல் ரவி. பின்னர் பல சீரியல்களில் நடித்து பிரபலமானார். இவர் கடந்த 2020-ம் ஆண்டு தனது காதலி லட்சுமி நாயரை திருமணம் செய்து கொண்டார்.
பின்னர் இருவரும் இனைந்து ரீல்ஸ்களை பதிவிட்டு வந்தனர். இதன் மூலம் இந்த ஜோடி சமூக வலைத்தளங்களில் பிரபலமாக இருந்தனர். ஆனால் திருமணமான சில மாதங்களிலேயே இந்த தம்பதி பிரிந்தனர்.
நீதிமன்றம் உத்தரவு
ராகுல் பல பெண்களுடன் தொடர்பு இருப்பதாக, அவரது மனைவி லட்சுமி நாயர் புகார் அளித்தார். இதனால், ராகுல் ரவி மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டதையடுத்து, அவர் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
ஆனால் அவரது மனுவை நீதிமன்றம் நிராகரித்தது. இதனையடுத்து உச்ச நீதிமன்றத்தில் ராகுல் ரவி மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், 2 மாதங்களாக தலைமறைவாக உள்ள ராகுல் ரவிக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.