சின்னத்திரை நடிகை டிஜிபி அலுவலகத்தில் தீ குளிக்க முயற்சி..!
புகார் அளித்த மனு மீது நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி சின்னத்திரை நடிகை பரமேஸ்வரி மண்ணெய் ஊற்றி தீ குளிக்க முயற்சித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சின்னத்திரை நடிகை பரமேஸ்வரி (எ) பைரவி கடந்த மார்ச் 25ம் தேதி போலீசில் அளித்த புகாரில், ‘வேலூரை சேர்ந்த ராஜாதேசிங்கு (எ)சுப்பிரமணி தயாரிப்பாளர் என்று அறிமுகமானார்.
என்னை தயாரிப்பாளராக ஆக்குகிறேன் என கூறினார். மயிலாடுதுறைக்கு சினிமா தயாரிப்பு தொடர்பாக என்னை அழைத்து சென்று அங்கு கோயிலில் கட்டாய தாலி கட்டினார்.
என்னை பாலியல் தொழில் செய்ய வற்புறுத்துகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார்.
இந்த புகார் மீது நடவடிக்கை இல்லாததால், நேற்று மாலை டிஜிபி அலுவலகம் செல்ல முயன்றார். அப்போது பைரவி கையில் கொண்டு வந்த மண்ணெண்ணெயை தலையில் ஊற்றி தீக்குளிக்க முயற்சித்தார்.
பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் உரிய நேரத்தில் பைரவி மீது தண்ணீர் ஊற்றி மீட்டனர். மெரினா காவல்நிலைய உதவி ஆய்வாளர் சீனிவாசன் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறார்.