சீரியலில் மாமியார் நிஜத்தில் மனைவி... பிரம்மிக்க வைக்கும் காதல் கதை!
பொதுவாகவே ஒருவர் மீது காதல் வர பல காரணங்கள் இருக்கிறது. உண்மையான காதலுக்கு தோற்றம், நிறம், வயது, அந்தஸ்து, மொழி, இனம், மதம் என எதும் முக்கியம் கிடையாது.
அப்படி ஒரு ஜோடி சீரியலில் சேர்ந்து நடித்த போது காதல் வயப்பட்டு திருமணம் செய்து கொண்டார்கள்.
இதில் என்ன ஆச்சரியம், சீரியலில் சேர்ந்து நடிப்பவர்கள் காதலித்து திருமணம் செய்து கொள்வது சாதாரணம் தானே என்று சிந்திக்க கூடும். ஆனால் இந்த காதல் சற்று வித்தியாசமானது.
சீரியலில் தனக்கு மாமியாராக நடித்த நடிகையை அதே சீரியலில் மருமகனாக நடித்த நடிகர் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.அண்மையில் இவர்கள் தங்களின் 20வது திருமண நாளை கொண்டாடியுள்ளனர்.
இவர்களின் திருமணத்திற்கு பல எதிர்ப்புகள் வந்த போதும் அதைப்பற்றி கவலைப்படாமல் இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளார்கள்.
இந்திரனில் - மேக்னா ராமி
அவர்கள் தான் இந்திரனில் - மேக்னா. தெலுங்கில் மிகவும் பிரபலமான சீரியல் "சக்ரவாகம்". இந்த தொடர் 2003-ல் ஒளிபரப்பானது. இதில் தனது கணவர் இந்திரனிலுக்கு மாமியாராக மேக்னா ராமி நடித்திருந்தார்.
பல வருடம், 1000 எபிசோடுகளை கடந்து ஓடிய இந்த சீரியலின் டிஆர்பி எப்போதுமே டாப் 3-யில் மட்டுமே இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
குறித்த சீரியலில் மாமியார் மருமகனா நடித்த இந்திரனீலும், மேகனாவும் நிஜ வாழ்க்கையில் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள்.
இவர்களுக்கு திருமணம் ஆகி 20 வருடம் ஆன போதிலும், இதுவரை குழந்தை இல்லாதது மிகவும் கஷ்டமாக உள்ளதாக அண்மையில் தங்களின் திருமண நாளை கொண்டாடிய இவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இருப்பினும் 40 வயதை எட்டிய இந்த தம்பதியினருக்கு, "இப்போது குழந்தை பிறந்தாலும், அவர்களை வளர்க்கும்போது 60 வயதாகும்.அந்த சமயத்தில் குழந்தைகளை சரியாக பராமரிக்க யார் இருப்பார்கள் என்ற பயம் இருக்கின்றது அதனால் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பவில்லை” எனவும் குறிப்பிட்டுள்ளனர்.