நீ என்ன கடவுளா? - எதிர் நீச்சல் சீரியல் நடிகர் குணசேகரனிடம் ஜோசியர்கள் கடும் வாக்குவாதம்..!

Tamil Cinema Tamil TV Serials Tamil TV Shows Ethirneechal
By Thahir Jul 24, 2023 10:16 AM GMT
Report

டிவி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட எதிர்நீச்சல் சீரியல் நடிகர் குணசேகரனிடம் ஜோசியர்கள் கடும் வாக்குவாதம் செய்யும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

எதார்த்தமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தார்

சின்னத்திரை பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் மாரிமுத்து. இயக்குநர்கள் வசந்த், எஸ்.ஜெ.சூர்யா போன்ற இயக்குநர்களிடம் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார்.

serial actor gunasekaran heated argument

இவர் கண்ணும் கண்ணும் மற்றும் புலி வால் போன்ற படங்களை இயக்கியுள்ளார். பின்பு மிஸ்கினின் இயக்கத்தில் வெளியான யுத்தம் செய் படத்தில் நடிகராக நடித்திருந்தார்.

அவரின் எதார்த்தமான நடிப்பு மூலம் பல ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இதன் மூலம் அவருக்கு பல படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

ட்ரெண்ட் ஆகும் வீடியோ 

தற்போது இவர் கமலின் இந்தியன் 2 மற்றும் ரஜினியின் ஜெயிலர் படங்களில் நடித்து வருகிறார். இதுமட்டுமல்லாமல் எதிர் நீச்சல் சீரியல் தான் அவரை மேலும் பிரபலமாக்கியுள்ளது.

எதிர் நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரனாக நடித்து வரும் மாரிமுத்துவிற்கு மிகப் பெரிய வரவேற்பு இருந்து வருகிறது.

அந்த வகையில், டிவி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற மாரிமுத்து ஜோசியர்களை ரைட் அன்ட் லெப் வாங்கிய வீடியோ காட்சிகள் இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

ஜோசியர்களுடன் மாரிமுத்து வாக்குவாதம் 

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் தமிழா தமிழா என்ற நிகழ்ச்சியில் ஜோசியர்களும், அவர்களை எதிர்ப்பவர்களும் என்ற விவாத நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக மாரிமுத்து கலந்து கொண்டு ஜோசியர்களுக்கு எதிராக பேசினார். அப்போது அவர் பேசுகையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜாதகத்தின் படி அவர் முதலமைச்சர் ஆகவே மாட்டார் என அனைவரும் சொன்னார்கள் ஆன அவர் முதலமைச்சர் ஆகிவிட்டார்.

serial actor gunasekaran heated argument

மேலும் ரஜினி பிறந்த அதே நாளில் அதே நேரத்தில் உலகத்தில் ஒரு லட்சம் பேர் பிறந்துள்ளார். அவர்கள் ஏன் ரஜினியாக ஆகவில்லை. ரஜினி உழைத்தார் அதனால் அவர் சூப்பர் ஸ்டாரானார். எனவே ஜோசியத்தை எல்லாம் நம்பக்கூடாது என பேசினார் மாரிமுத்து.

இவரின் பேச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜோசியர்கள் அனைவரும் பேச, அதற்கு மாரிமுத்து, முதல்ல உட்காரு என அவரின் ஸ்டைலில் பேசியது ரசிகர்களின் கைதட்டலை பெற்றது. தற்போது இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.