கனா காணும் காலங்கள் சீரியல் நடிகர் திடீர் மரணம் - அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

Tamil Cinema Actors Death Tamil TV Serials Tamil Actors
By Jiyath Dec 31, 2023 11:14 AM GMT
Report

பிரபல சின்னத்திரை நடிகர் அன்பழகன் காலமானார்.

நடிகர் அன்பழகன்

கானா காணும் காலங்கள் என்ற சீரியலின் முதல் சீசன் மூலம் பிரபலமானவர் நடிகர் அன்பழகன். இவர் அந்த சீரியலில் P.E.T வாத்தியாராக நடித்து ரசிகர்கள் பலரையும் ஈர்த்தார்.

கனா காணும் காலங்கள் சீரியல் நடிகர் திடீர் மரணம் - அதிர்ச்சியில் ரசிகர்கள்!! | Serial Actor Anbazhagan Passed Away

இதனைத் தொடர்ந்தது ரெட்டை வால் குருவி, தாயுமானவன் , ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் அண்ணா மற்றும் சீதா ராமன் போன்ற பல சின்னத்திரை தொடர்களில் அன்பழகன் நடித்து வந்தார்.

காலமானார் 

இந்நிலையில் அவரின் மரணம் சின்னத்திரையில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அன்பழகனின் மறைவுக்கு சின்னத்திரை நட்சத்திரங்கள், ரசிகர்கள் என ஏராளமானோர் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

கனா காணும் காலங்கள் சீரியல் நடிகர் திடீர் மரணம் - அதிர்ச்சியில் ரசிகர்கள்!! | Serial Actor Anbazhagan Passed Away

இந்த ஆண்டு பல சினிமா பிரபலங்களும், சின்னத்திரை பிரபலங்களும் உயிரிழந்த நிலையில், தற்போது அன்பழகனின் மறைவும் ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.