எனக்கு நாடுதான் சார் முக்கியம் : ஆட்டகளத்தை விடுத்து போர்களத்திற்கு தயாரான டென்னிஸ் வீரர்

Russia Ukraine RussiaUkraineConflict SergiyStakhovsky
By Irumporai Feb 27, 2022 03:15 AM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

உலகநாடுகள் உக்ரைன் மீது போர் வேண்டாம் எனக் கூறியும், அதன் மீது இரக்கமே இல்லாமல் போர்தொடுத்து வருகிறது ரஷ்யா, இந்த சூழ்நிலையில் உக்ரைனில் உள்ள குடிமக்கள் தங்களின் நாட்டின் பதுகாப்பிற்காக ராணுவத்தில் இணைந்து வருகின்றனர்.

அந்த வகையில், ரஷ்ய படையெடுப்பை எதிர்த்துப் போராடுவதற்காக தனது நாட்டின் இராணுவத்துடன் இணைந்துள்ளார்  உக்ரைன் டென்னிஸ் வீரர் செர்ஜி ஸ்டாகோவ்ஸ்கி தெரிவ

 2022ல் ஆஸ்திரேலிய ஓபன் தகுதிச் சுற்றில் பங்கேற்ற ஸ்டாகோவ்ஸ்கி, தற்போது உக்ரைனில் போர் மேகம் சூழ்ந்துள்ளதால் தனக்கு பிடித்த ஆட்டகளத்தை விடுத்து போர் களத்தில் குதித்துள்ளார்.

 தனது மனைவி மற்றும் குழந்தைகளை பாதுகாப்பாக ஹங்கேரிக்கு அனுப்பி வைக்க உள்ளார். தான் ராணுவத்தில் இணைவது குறித்து ஸ்டாகோவ்ஸ்கி செய்தியாளர்களிடம் பேசுகையில்,

“எனக்கு ராணுவ அனுபவம் இல்லை, ஆனால் துப்பாக்கியை கையாளும் அனுபவம் எனக்கு உள்ளது. என் அப்பாவும் சகோதரனும் அறுவை சிகிச்சை நிபுணர்கள், அவர்கள் மன அழுத்தத்தில் உள்ளனர்.

ஆனால் நான் அவர்களிடம் அடிக்கடி பேசி தைரியப்படுத்துகிறேன். அவர்கள் வீட்டின் அடித்தளத்தில் தூங்குகிறார்கள். நிச்சயமாக, நான் நாட்டிற்காக சண்டையிடுவேன், என அவர் கூறியுள்ளார் .

மேலும் ஸ்டாகோவ்ஸ்கி தனது ட்விட்டர் பக்கத்தில் :

என் சக நாட்டு மக்களைப் பற்றி நான் பெருமை கொள்கிறேன்  உக்ரைன் ராணுவ வீரர்களே  உறுதியாக இருங்கள்  உங்களுக்கு உதவ ந்பலர் வீட்டிலிருந்து வருகின்றார்கள் என கூறியுள்ளார்.