அமெரிக்க ஓபன் டென்னிஸ்: செரினா வில்லியம்ஸ் விலகுவதாக அறிவிப்பு
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் இருந்து செரினா வில்லியம்ஸ் விலகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது .அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நேற்று தொடங்கியது ஆண்கள் பெண்கள் ஆகிய இருபாலருக்கும் ஆன போட்டிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது .
இந்தநிலையில் காயம் காரணமாக அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் இருந்து விலகுவதாக அமெரிக்காவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனை செரினா வில்லியம்ஸ் அறிவித்துள்ளார் .
Serena Williams withdraws from US Open due to injury
— ANI Digital (@ani_digital) August 25, 2021
Read @ANI Story | https://t.co/Qwdophf71U#USOpen pic.twitter.com/w85lJyNIqP
சமீபத்தில் நடைபெற்ற பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் செரீனா வில்லியம்ஸ், 4-வது சுற்றில் தோல்வியடைந்தார். பிறகு முதல் சுற்று ஆட்டத்தின்போது காயம் ஏற்பட்டதால் விம்பிள்டன் போட்டியிலிருந்து செரீனா வில்லியம்ஸ் விலகினார். இந்த முறை தொடரில் கண்டிப்பாக பட்டம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் செரினா விலகியிருப்பது டென்னிஸ் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டியிலிருந்து விலகிய செரீனா வில்லியம்ஸ், காயம் காரணமாக யு.எஸ். ஓபன் போட்டியிலிருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார்.

விடுதலை புலிகளின் தேவைக்காக இலங்கை வந்த ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் :கொக்கரிக்கும் விமல் வீரவன்ச IBC Tamil
