டென்னிஸ் பயணத்தை நிறைவு செய்தார் செரீனா வில்லியம்ஸ் : சோகத்தில் ரசிகர்கள்

Tennis
By Irumporai 6 மாதங்கள் முன்

 அமெரிக்க ஓபன் 3வது சுற்றில் ஆஸ்திரேலியா வீராங்கனையிடம் செரீனா வில்லியம்ஸ் தோல்வியுற்றார். இதன் மூலம் அவரது 27 ஆண்டு கால டென்னிஸ் பயணம் முடிவுக்கு வந்ததுள்ளது.

செரீனா வில்லியம்ஸ்

மகளிருக்கான ஒற்றையர் பிரிவு 3வது சுற்றில் 23 கிராண்ட்ஸ்லாம் வென்றுள்ள அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் தர வரிசையில் 46வது இடத்திலுள்ள ஆஸ்திரேலியாவின் அஜ்லா டோமலஜனோவிஜை எதிர்கொண்டார்.

டென்னிஸ் பயணத்தை நிறைவு செய்தார் செரீனா வில்லியம்ஸ் : சோகத்தில் ரசிகர்கள் | Serena Williams Defeated In Us Open Tennis

செரீனா முதல் செட்டை கைப்பற்ற, உடனே மீண்டு வந்த அஜ்லா, அடுத்த 2 செட்டுகளையும் தனதாக்கினார். முடிவில் 7-5, 6-7, 6-1 என்ற செட் கணக்கில் அஜ்லா வெற்றிபெற்றார். செரீனா தோல்வியை தழுவினாலும் 40 வயதில் இந்த அளவுக்கு போராடியதை பெரிய சாதனையாக பார்க்கப்பட்டது.

ஒய்வு பெற்றார் செரீனா

அமெரிக்க ஓப்பனில் தன்னுடைய பயணம் முடிவுக்கு வந்ததையடுத்து கண்ணீர்மல்க அவர் விடைபெற்றார். ஒரு குழந்தைக்கு தாயான செரீனாவால் முன்பு போல ஆக்ரோஷமாக விளையாட முடியவில்லை.

டென்னிஸ் பயணத்தை நிறைவு செய்தார் செரீனா வில்லியம்ஸ் : சோகத்தில் ரசிகர்கள் | Serena Williams Defeated In Us Open Tennis

இதனால் நடப்பு அமெரிக்க ஓபன் தொடருடன் டென்னிஸில் இருந்து விலகி இருப்பது பற்றி யோசிக்க போவதாக அவர் ஏற்கெனவே தெரிவித்திருந்த நிலையில் தற்போது செரீனாவின் டென்னிஸ் பயணம் முடிவுக்கு வந்துள்ளது. இதையடுத்து உலகெங்கும் உள்ள அவரது ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.