அரங்கத்திலேயே அழுத செரீனா வில்லியம்ஸ்! முதல் சுற்றிலேயே வெளியேறிய சோகம்!

sports tennis serena williams
By Anupriyamkumaresan Jun 30, 2021 06:52 AM GMT
Report

செரீனா வில்லியம்ஸ் காயம் காரணமாக விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் முதல் சுற்றிலேயே வெளியேறினார்.

விம்பிள்டன் ஒற்றையர் பிரிவில் 7 முறை சாம்பியன் பட்டம் வென்றவரும் 23-முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவருமான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் காயத்தால் முதல் சுற்றிலேயே வெளியேற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்.

அரங்கத்திலேயே அழுத செரீனா வில்லியம்ஸ்! முதல் சுற்றிலேயே வெளியேறிய சோகம்! | Serena Williams Cry And Stop Play Accident

பெலாரஸ் நாட்டை சேர்ந்த அலைக்சண்ட்ரா ஸஸ்னோவிச்சை எதிர்த்து செரீனா வில்லியம்ஸ் விளையாடிக்கொண்டு இருந்தார்.

அப்போது, டென்னிஸ் களத்தில் கால் சறுக்கியதால் இடது கணுக்காலின் காயம் ஏற்பட்டு வலியால் துடித்தார். சிறிய முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு தொடர்ந்து விளையாட முயற்சித்தார்.

அரங்கத்திலேயே அழுத செரீனா வில்லியம்ஸ்! முதல் சுற்றிலேயே வெளியேறிய சோகம்! | Serena Williams Cry And Stop Play Accident

34 நிமிடங்கள் ஆடி 3-3 என்ற கணக்கில் இருந்த நிலையில், வலி அதிகமானதால் போட்டியில் இருந்து ஓய்வு பெற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார்.

இதனால் முதல் சுற்றிலேயே நடப்பு விம்பிள்டன் தொடரில் இருந்து செரீனா வில்லியம்ஸ் வெளியேறினார். இதன் மூலம் 8-வது முறையாக விம்பிள்டன் பட்டம் வெல்லும் செரீனா வில்லியம்ஸின் கனவு தகர்ந்தது. செரீனா வில்லியம்ஸ் முதல் சுற்றிலேயே வெளியேறியது இதுவே முதல் முறையாகும்.

அரங்கத்திலேயே அழுத செரீனா வில்லியம்ஸ்! முதல் சுற்றிலேயே வெளியேறிய சோகம்! | Serena Williams Cry And Stop Play Accident

அதனால் அடிபட்ட வலியுடன், ஆட்டத்திலுருந்து வெளியேறும் வேதனையில் அவர் அரங்கத்திலேயே கண்ணீர் விட்டு அழுதார். ​