செப் 11 மகாகவி நாள் - முதல்வர் அதிரடி அறிவிப்பு
பாரதியார் நினைவு நாளான செப்டம்பர் 11ஆம் தேதி இனி ‘மகாகவி’ நாளாக கடைபிடிக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாரதியார் நினைவு நாளான செப்.11 இனி மகாகவி நாளாக கடைபிடிக்கப்படும் செப்.11-ல் மாணவர்களுக்கு மாநில அளவில் கவிதைப்போட்டி நடத்தி பாரதி இளங்கவிஞர் விருது தரப்படும்
மாணவர் ஒருவருக்கும், மாணவி ஒருவருக்கும் விருதுடன் ஒரு லட்ச ரூபாய் பரிசு தொகையும் வழங்கப்படும்
பாரதியாரின் பாடல்கள், கட்டுரைகளை தொகுத்து மனதில் உறுதி வேண்டும் என்ற புத்தகம் வழங்கப்படும்.
நினைவு நூற்றாண்டையொட்டி ஓராண்டுக்கு சென்னை பாரதியார் நினைவு இல்லத்தில் வாரந்தோறும் நிகழ்ச்சி நடத்தப்படும்.
பள்ளி, கல்லூரி, பேருந்து நிலையங்களில் எழுதியும், வரைந்தும் பாரதியாரின் வரிகள் பரப்பப்படும்.
உத்திரபிரதேச மாநிலம், காசியில் பாரதியார் வாழ்ந்த வீட்டை பராமரிக்க அரசின் சார்பில் நிதியுதவி தரப்படும்.
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பாரதியார் பெயரில் ஆய்விருக்கை அமைக்கப்படும்
ஊரக வளர்ச்சித்துறை மகளிர் சுய உதவிக்குழுக்களின் வாழ்வாதார பூங்காவிற்கு மகாகவி பாரதியார் பெயர்
எழுத்தும் தெய்வம் - எழுதுகோலும் தெய்வம் என வாழ்ந்து புதுநெறி காட்டிய புலவன் பாரதியை போற்றுவோம்
பாரதியாரின் பாடல்களுடன் திரையில் பாரதி என்ற நிகழ்வு நேரு விளையாட்டரங்கில் நடத்தப்படும்