செப்டம்பர் 1ம் தேதி முதல் அங்கன்வாடி மையங்கள் திறப்பு - மகிழ்ச்சியில் குழந்தைகள்
செப்டம்பர் 1ம் தேதி முதல் அங்கன்வாடி மையங்கள் திறக்கப்படவுள்ள நிலையில் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழ்நாடு அரசு.
செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் திறக்கப்படும் அங்கன்வாடி மையங்களில் சூடான சத்துணவு வழங்க வேண்டும்.
அங்கன்வாடிகளை சுத்தமாக பராமரிக்க வேண்டும்.
முட்டைகளை வீடுகளுக்கு எடுத்துச் செல்ல அனுமதிக்கக் கூடாது.
2 வயது முதல் 6 வயது வரையிலான குழந்தைகளுக்கு சத்துணவு மட்டும் 11:30 முதல் 12 30க்குள் தர உத்தரவு
காலாவதியான தரமற்ற பொருட்களை சமையலுக்கு பயன்படுத்த கூடாது என வழிகாட்டு நெறிமுறை வெளியீடு
அங்கன்வாடி பணியாளர்கள் விரல் நகங்களில் நகப்பூச்சு, செயற்கை நகங்கள் ஏதும் பயன்படுத்தக்கூடாது
மூக்கு சரிதல், தலை கோதுதல், கண்கள், காது, வாயை தேய்த்தல், எச்சில் துப்புவது தவிர்க்க அறிவுரை
அனைத்து அங்கன்வாடி ஊழியர்களும் இரண்டு தவணை தடுப்பூசி போட்டு இருக்க வேண்டும்
அங்கன்வாடி மையம் வரும் இரண்டு முதல் ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகள் மாஸ்க் அணிவது கட்டாயமில்லை
செப்டம்பர் 1ம் தேதி முதல் அங்கன்வாடி மையங்கள் திறப்பு - வழிக்காட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு..#tngovt pic.twitter.com/eomIaSnovA
— M R KRISHNAKUMAR✍️ சட்ட விழிப்புணர்வு உலகம் (@MRK_POLLACHI) August 25, 2021