இன்று முதல் அமுலுக்கு வரும் முக்கிய விதிமுறைகள்

India
By Fathima Sep 01, 2026 09:34 AM GMT
Report

இன்று செப்டம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு வந்த நடைமுறைகள் பற்றி பார்க்கலாம்.

* வெளிநாடு செல்லும் பயணிகள், விமான நிலையங்களில் குடியுரிமை கவுண்டர்களில் போர்டிங் பாஸில் முத்திரை பெற வேண்டிய அவசியமில்லை, மின்னணு அல்லது அச்சிடப்பட்ட போர்டிங் பாசை காண்பித்தால் போதும்.

* எல்பிஜி இணைப்பில் கேஒய்சி செய்வதற்கான காலக்கெடு நேற்றுடன் முடிவடைந்துவிட்டது, இதனை செய்யாவிடில் வீட்டு உபயோக சிலிண்டரை பெறுவதில் சிக்கல் எழலாம்.

* 3 கோடி அல்லது அதற்கு மேற்பட்ட வைப்பு தொகைகளுக்கான வட்டி விகித விபரங்களை ஒவ்வொரு நாளும் வங்கிகள் காலை 10.10 மணிக்குள் வெளியிட வேண்டும், வட்டி விகிதங்களில் வெளிப்படைத்தன்மையை கொண்டுவருவதற்காக இந்த விதி கொண்டு வரப்பட்டுள்ளது.