உருவானது சென்யார் புயல்; என்ன பாதிப்பு? வானிலை ஆய்வு மையம்சொன்னதென்ன!
மலாக்கா ஜலசந்தியில் சென்யார் புயல் உருவானது.
சென்யார் புயல்
மலேசியா மற்றும் அதனையொட்டிய மலாக்கா ஜலசந்தி பகுதிகளில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று இன்று (நவம்பர் 26) சென்யார் புயலாக உருவாகியுள்ளது.

இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 6 கி.மீ. வேகத்தில் கடந்த 6 மணி நேரமாக 10 கி.மீ. வேகத்தில் அதே பகுதியில் நிலவி வருகிறது. இந்தியாவிலிருந்து 2600 கி.மீ. தொலைவில் மையம் கொண்டிருக்கிறது.
என்ன பாதிப்பு?
இதனால் தமிழகத்திற்கு எந்தவித பாதிப்பும் கிடையாது. இந்த புயல் மீண்டும் நாளை (27.11.29025) தாழ்வு மண்டலமாக வலுக் குறையும். இந்த சென்னியார் புயல் தமிழகத்திலிருந்து சுமார் 2600 கி.மீ. தொலைவில் உள்ளதால் தமிழகத்திற்கு மழைக்கான பாதிப்பு கிடையாது.

மேலும் தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் தெற்கு இலங்கை பகுதியில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்று அதற்கடுத்த 24 மணி நேரத்தில், காற்றழுத்த தாழ்வு மண்டலமாகத் தீவிரமடைய உள்ளது.
அதனைத் தொடர்ந்து நாளை மீண்டும் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுக் குறையும். இந்நிலையில் இன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.