தைரியம் இருந்தா கை வைச்சு பாரு: மாரிதாஸை கிண்டலடித்த செந்தில்குமார் எம்.பி.,

Kishore k Swamy Senthilkumar mp Maridoss
By Petchi Avudaiappan Jun 14, 2021 03:51 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in அரசியல்
Report

கிஷோர் கே சாமி கைது நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து யூடியூபர் மாரிதாஸ் ட்விட்டரில் கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார்.

முன்னாள் தலைவர்கள் அண்ணா, கருணாநிதி, மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலினை அவதூறு பரப்பும் வகையில் கருத்துகளை பதிவிட்டதாக பாஜக ஆதரவாளர் கிஷோர் கே சுவாமி இன்று காலை கைது செய்யப்பட்டார்.

இந்த கைது நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து யூடியூபர் மாரிதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், "திமுக நிர்வாகிகள் பேசாத பேச்சா போடாத பதிவா! ஆட்சி நிர்வாகத்தை ஒழுங்கா செய்யத் திறமை இல்லை, கேட்கும் கேள்விகளுக்குப் பதில் இல்லை! ஆக வழக்கமான அடக்குமுறை அரசியலில் திமுக ஸ்டாலின் அவர்கள் இறங்கியுள்ளார்.சட்டத்தை தன் பழிவாங்கும் அரசியலுக்கு வளைக்கும் இந்த ஆட்சியை கலைப்பது தான் சரி" என பதிவிட்டு இருந்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில் குமார், ‘ தைரியம் இருந்தா கை வைச்சு பாரு... நீங்க எல்லாம் யாரு நீங்க சொல்லிட்டா மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை கலைத்துவிடுவர்களா செம காமெடி. நிறைய வேலை இருக்கு. அவங்க வரும்வரை நேரத்தை பயன் உள்ளதாக செலவழிக்கவும். பி கு: உள்ளே போகும் போது மறக்காம போர்டை எடுத்துட்டு போகவும் என கூறியுள்ளார்.

ட்விட்டரில் இந்த வார்த்தை மோதல் அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது