செந்தில்பாலாஜிக்கு உடல்நலக்குறைவு - ஓமந்தூரார் மருத்துவமனைக்கு திடீர் மாற்றம்!
ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைபெற்ற செந்தில்பாலாஜி ஓமந்தூரார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
செந்தில்பாலாஜி
சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
தொடர்ந்து, ஜாமீன் மறுக்கப்பட்டு வரும் நிலையில் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இன்று மாலை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது.
உடல்நலக்குறைவு
உடனடியாக காவல்துறை ஆம்புலன்ஸ் மூலமாக பலத்த பாதுகாப்புடன் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
இதனையடுத்து, அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஓமந்தூரார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். தற்போது அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.