பாம்பு விஷயத்தை கையில் எடுத்த செந்தில்பாலாஜி- அதிர்ச்சியில் தமிழக அரசு
மக்கள் பல கோமாளிகளின் மேதாவித்தனங்களை விட பாம்பு, பல்லிகளின் தொல்லைகள் பரவாயில்லை எனத் தோன்றுவதாக அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.
தமிழகத்தில் புதிதாக திமுக அரசு ஆட்சியமைத்ததும் ஆங்காங்கே மின்தடை ஏற்பட தொடங்கியது. இது மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில் சட்டசபையில் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இதுகுறித்து விளக்கமளித்தார். அதில், 'சில இடங்களில் செடிகள் வளர்ந்து மின் கம்பிகளுடன் மோதுவதால் அங்கு அணில்கள் வருகின்றன.
இதனால் மின்தடை ஏற்படுகிறது' என அவர் விளக்க இணையத்தில் மீம்ஸ்கள், எதிர்ப்புகள், கிண்டல்கள் என ரெக்கை கட்டி பறந்தன. அதுமட்டுமல்லாமல் அனைத்து கட்சியினரும் செந்தில்பாலாஜியின் விளக்கத்தை விமர்சித்தனர். இதனிடையே சில தினங்களுக்கு முன் தனது ட்விட்டர் பக்கத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி பதிவு ஒன்றை வெளியிட்டார்.
ஈங்கூர் - திங்களுர் 110KV துணை மின் நிலையத்தில், Bphase conductor பழுதானது. அதை சீர்ப்படுத்தும் போது, அந்த பழுதுக்கு காரணம் பாம்பு என மின் பணியாளர்கள் கண்டறிந்தனர். pic.twitter.com/lyP1Y92U63
— V.Senthilbalaji (@V_Senthilbalaji) August 15, 2021
அதில் ஈங்கூர் - திங்களுர் 110KV துணை மின் நிலையத்தில், Bphase conductor பழுதானது. அதை சீர்ப்படுத்தும் போது, அந்த பழுதுக்கு காரணம் பாம்பு என மின் பணியாளர்கள் கண்டறிந்தனர் என்று பாம்பு புகைப்படத்துடன் விளக்கமளித்தார்.
இதனை பகிர்ந்துள்ள பத்திரிகையாளரும், அரசியல் விமர்சகருமான சுமந்த் சி ராமன், 'அணில் டு பாம்பு இது முன்னேற்றம் இல்லையா?' என கிண்டல் செய்தார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பல கோமாளிகளின் மேதாவித்தனங்களை காணும்போது, பாம்பு பல்லிகளின் தொல்லைகள் பரவாயில்லை என தோன்றுகிறது சுமந்துராமன்..." என அமைச்சர் செந்தில் பாலாஜி குறிப்பிட்டுள்ளார்.
பல கோமாளிகளின் மேதாவித்தனங்களை காணும் போது, பாம்பு பல்லிகளின் தொல்லைகள் பரவாயில்லை என தோன்றுகிறது சுமந்துராமன்... https://t.co/HNvXsUL0e4
— V.Senthilbalaji (@V_Senthilbalaji) August 16, 2021
மின் தடைக்கு முன் அணில்,தற்போது பாம்பு என விதவிதமான காரணங்களை தெரிவிப்பது பெரும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.