தள்ளுபடியான மனு..அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சிறை கைதிக்கான பதிவேடு எண் : வெளியான முக்கிய தகவல்
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு புழல் சிறை கைதிக்கான பதிவேடு எண் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜி கைது
சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கைதான நிலையில், வரும் 28-ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டார்.
இதனால், செந்தில் பாலாஜிக்கு சிறை கிட்டத்தட்ட உறுதியானது என்றே கூறப்படுகிறது. இந்த நிலையில் நீதிமன்ற காவலை நிராகரிக்க கோரி செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை மாவட்ட அமர்வு நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது அதனை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது .
சிறை கைதிக்கான பதிவேடு
இவ்வாறான நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு புழல் சிறை கைதிக்கான பதிவேடு எண் வழங்கப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, புழல் சிறையில் இருந்து விசாரணை கைதிக்கான பதிவேடு எண் வழங்கப்பட்டுள்ளது.
இதனால், சிறை கைதிகளுக்கு வழங்கப்படும் எண், சிறை கைதிக்கு உள்ள விதிமுறைகள் அனைத்தும் செந்தில் பாலாஜிக்கு பொருந்தும் எனவும் கூறப்படுகிறது.