அமைச்சர் செந்தில் பாலாஜியின் அலுவலகத்துக்கு சீல் : அமலாக்கத்துறை நடவடிக்கை
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான கரூர் அலுவலகத்துக்கு அமலாக்கத்துறை சீல் வைத்துள்ளது.
செந்தில்பாலாஜி வீட்டில் சோதனை
கரூரில் அமைந்துள்ள அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான அலுவலகத்தில் நடைபெற்ற அமலாக்கத்துறையின் சோதனையை அடுத்து, கரூர் ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் அமைந்துள்ள செந்தில் பாலாஜியின் அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. நேற்று நடைபெற்ற அமலாக்கத்துறையின் 18 மணிநேர சோதனைக்கு பிறகு இன்று அதிகாலை அமைச்சர் கைது செய்யப்பட்டார்.
சீல் வைத்த அதிகாரிகள்
அப்போது விசாரணைக்கு அழைத்து செல்லும் போது நெஞ்சுவலி காரணமாக ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்றுவருகிறார். இந்த நிலையில் இன்று கரூர் அலுவலகத்தில் தொடர்ந்த சோதனைக்கு பிறகு, கரூர் ராமகிருஷ்ணாபுரத்தில் உள்ள அலுவலகத்தில் அமலாக்கத்துறையினர் நோட்டீஸ் ஒட்டி, அவரது சகோதரர் நடத்திவரும் அலுவலகத்துக்கு சீல் வைத்துள்ளனர்.
மேலும் தங்கள் அனுமதியின்றி திறக்கக்கூடாது என்றும் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து சென்னையிலுள்ள அலுவலகத்தில் இது குறித்து நேரில் விளக்கம் தர வேண்டும் என்று அமலாக்கத்துறையினர் நோட்டீஸில் குறிப்பிட்டுள்ளனர்.