புழல் சிறையில் அடைக்கப்பட்டார் செந்தில் பாலாஜி..!
காவேரி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்க கொண்டு செல்லப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியள்ளது.
புழல் சிறையில் செந்தில் பாலாஜி
கடந்த 21 ஆம் செந்தில் பாலாஜிக்கு காவேரி மருத்துவமனையில் பைபாஸ் அறுவை சிசிச்சை மேற்கொள்ளப்பட்டது.
இதை தொடர்ந்து சொந்தில் பாலாஜிக்கு மருத்துமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உடல் நலம் முன்னேற்றம் அடைந்துள்ளது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
இதையடுத்து அவரை புழல் சிறையில் அடைக்க போலீசார் அழைத்துச் செல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
காவேரி மருத்துமனையில் இருந்து 108 ஆம்புலன்சில் மாலை 4.41 மணிக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றனர். அவருக்கு விசாரணை கைதிகளுக்கான முதல் வகுப்பு சிறை அறை வழங்கப்பட்டு உள்ளது.
அவருக்கு கைதி எண் TN20 G3523 வழங்கப்பட்டு இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.