உழைப்பவர்கள் முதல் நிலைக்கு வர முடியும் என்பதற்கு முதலமைச்சரே உதாரணம் - அமைச்சர் செந்தில் பாலாஜி..!
உழைப்பவர்கள் முதல் நிலைக்கு வர முடியும் என்பதற்கு முதலமைச்சரே உதாரணம் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
நானும் அரசுப்பள்ளி மாணவன் தான்
கரூர் மாவட்ட பள்ளிக் கல்வித் துறை சார்பில் "கல்லூரிக் கனவு" எனும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி வெண்ணைமலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டார். இதில் பேசிய அவர், அரசுக் கல்லூரியில் பயிலும் மாணவிகளும் உயர் கல்வி பயில வேண்டும் என்பதற்காக மாதம் 1000 ரூபாய் வழங்கி வருகிறார் முதல்வர்.
"நான் முதல்வன்" துவக்கி வைத்த முதல்வர், தமிழகத்திற்கான முதல்வராக நான் இருக்கிறேன், நீங்கள் ஒவ்வொரு துறையிலும் முதல்வராக இருக்க வேண்டும் என்றார்.
அரசுப் பள்ளியில் படித்த பலரும் பல்வேறு துறைகளில் சாதனை படித்துள்ளனர். மிகச் சிறந்த பள்ளியாக அரசுப் பள்ளியாக உருவாக்கி வைத்துள்ளார் முதல்வர்.
12200 பேரும் சிறந்த முறையில் படித்து பல்வேறு துறைகளில் சாதிக்க வேண்டும். உழைப்பவர்கள் முதல் நிலைக்கு வர முடியும் என்பதற்கு முதல்வரே உதாரணம்.
50 ஆண்டு கால உழைப்பு. அவர் போல் நாமும் உழைக்க வேண்டும் என தோன்றும். எந்த சூழலிலும் உயர் கல்விக்கு அழைத்துச் செல்ல உறுதுணையாக நாங்கள் இருப்போம்.நான் அரசுப் பள்ளி, கல்லூரியில் படித்து தான் இந்த நிலைக்கு வந்துள்ளேன் என்றார்.