என் கணவரை சட்டவிரோதமாக கைது செய்துள்ளனர் - செந்தில் பாலாஜி மனைவி நீதிமன்றத்தில் மனு தாக்கல்..!
அமைச்சர் செந்தில் பாலாஜியை சட்டவிரோதமாக கைது செய்துள்ளதாக கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட் கொணர்வு மனு தாக்கல் செய்தார் அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி.
மருத்துவமனையில் அமைச்சர் செந்தில் பாலாஜி
தமிழக மதுவிலக்கு ஆயத்தீர்வை மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜின் வீடு, தலைமை செயலக அலுவலகத்தில் அமலாக்கத்துறையினர் சுமார் 18 மணிநேரம் சோதனை நடத்தி பின்னர் அமைச்சர் செந்தில் பாலாஜியை விசாரணைக்காக கைது செய்து அழைத்து செல்லப்பட்டார்.
அப்போது அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து அவர் ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
சென்னை, ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல் நலம் குறித்து அதிகாலை அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், மா.சுப்பிரமணியன், சேகர் பாபு, எ.வ.வேலு, ரகுபதி ஆகியோர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.
செந்தில் பாலாஜி மனைவி ஆட் கொணர்வு மனு
இதை தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை ஓமந்துாரார் மருத்துவமனைக்கு சென்று அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல் நலம் குறித்து கேட்டறிந்தார்.

இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியை சட்டவிரோதமாக கைது செய்துள்ளதாக கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட் கொணர்வு மனு தாக்கல் செய்தார் அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி. பிற்பகலில் நீதிபதிகள் சுந்தர், சக்திவேல் அமர்வு முன் விசாரணைக்கு வர உள்ளதாக தகவல்.