தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம் - பொன்முடி, செந்தில் பாலாஜியின் அமைச்சர் பதவி பறிப்பு
தமிழக அமைச்சரவை 7ஆவது முறையாக மாற்றம் செய்யப்பட்டுளளது.
அமைச்சரவை மாற்றம்
தமிழக அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜி மற்றும் பொன்முடி விடுவிக்கப்பட்டுள்ளனர்.
சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட நிலையில், அவர் வகித்து வந்த மின்சாரம் மற்றும் மது விலக்கு துறை அமைச்சர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
கடந்த ஆண்டு அவர் ஜாமீனில் வெளிவந்த நிலையில், மீண்டும் அமைச்சர் ஆக்கப்பட்டு, அவர் வகித்து வந்த அதே மின்சாரம் மற்றும் மது விலக்கு துறைவழங்கப்பட்டது.
தற்போது நாளை அந்த வழக்கு விசாரணைக்கு வர உள்ள நிலையில், செந்தில் பாலாஜி தமிழக அமைச்சரவையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
அவர் வகித்து வந்த மின்சாரத்துறை, போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கருக்கு கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை , வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமிக்கு கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதே போல் பொன்முடி கவனித்து வந்த வனத்துறை மற்றும் காதி துறை, பால்வளத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பொன்முடி தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை பேசி வந்த நிலையில், அவரது அமைச்சர் பதவி பறிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பத்மநாபபுரம் எம்.எல்.ஏ மனோதங்கராஜ் மீண்டும் அமைச்சராக உள்ளார்.
நாளை மாலை 6 மணிக்கு ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சரவை பதவியேற்பு விழா நடைபெறவுள்ளது