செந்தில் பாலாஜியின் புதிய மனு - ED'க்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு
சிறையில் இருக்கும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை மாவட்ட 3வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
செந்தில் பாலாஜி
தமிழ்நாட்டின் முன்னாள் மின்வாரிய துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, சட்டவிரோத பணபரிவர்தனையில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14-ஆம் ஆண்டு கைதாகி சிறையில் அடைக்கப்பட்டார்.
அண்மையில் தனது அமைச்சர் பதவியை அவர் ராஜினாமா செய்துள்ள நிலையில், நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்வது பிப்ரவரி 16ம் தேதி முடிவடைந்தது.
இதற்காக அவரை நீதிமன்றம் நேரில் ஆஜராக உத்தரவிட்டிருந்த நிலையில், அமலாக்கத்துறை வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக்கோரி செந்தில் பாலாஜியின் சென்னை மாவட்ட 3வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
உத்தரவு
மேலும், தனக்கு எதிரான குற்றச்சாட்டுக்களுக்கு முகாந்திரமில்லை என செந்தில் பாலாஜி தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டு, வழக்கில் இருந்து விடுவிக்க கோரிய மனு மீது உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை குற்றச்சாட்டுகள் பதிவினை தள்ளிவைக்கவும் செந்தில் பாலாஜி தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இந்த மனு தாக்கலின் காரணமாக குற்றச்சாட்டு பதிவு செய்யும் நடைமுறை மேற்கொள்ளப்படாமல் தள்ளிவைக்கப்பட்டது. இந்த மனுக்கள் இன்றைய விசாரணையில் செந்தில் பாலாஜி தரப்பு மனு குறித்து அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணை வரும் மார்ச் 4-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.