கைது செய்யப்பார்க்கிறார்கள்: செந்தில் பாலாஜி கடிதம்
திமுக எம்எல்ஏ-வும் முன்னாள் அமைச்சருமான செந்தில் பாலாஜி, தான் எங்கும் ஓடி ஒளியவில்லை என திருவல்லிக்கேணி போலிசாருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
தவெக ஆட்சியை கவிழ்க்க சதி
தவெக ஆட்சியை கவிழ்க்க சதி செய்ததாக எழுந்த புகாரில், முன் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்தனர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார்.
நீதிமன்றம் அவர்களுக்கு முன்ஜாமீன் வழங்கியதுடன் சென்னை திருவல்லிக்கேணி போலிஸ் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என உத்தரவிட்டது.
போலிஸ் நிலையத்தில் அவர் ஆஜராகாத நிலையில், செந்தில் பாலாஜியும், அவரது சகோதரர் அசோக்குமார் கடிதம் எழுதியுள்ளனர்.

செந்தில் பாலாஜி கடிதம்
அந்த கடிதத்தில், வழக்குப்பதிவில் தங்கள் பெயரே இல்லாதபோது, விசாரணைக்கு மட்டும் எப்படி ஆஜராக முடியும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
சட்டப்பிரிவு 35, 3ன் கீழ் உரிய நோட்டீஸ் வழங்கப்பட வேண்டும் என்றும் தான் ஒரு மக்கள் பிரதிநிதி என்பதால் எங்கும் ஓடிஒளியவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.
மேலும் வழக்கின் விசாரணைக்காக தாங்கள் ஆஜராகும் பட்சத்தில், இதனைப் பயன்படுத்தி வேறு எந்த வழக்கிலும் தங்களைக் கைது செய்யக் கூடாது என்றும் தேவையான மருத்துவ வசதிகள் செய்து தரப்பட வேண்டும் எனவும் நிபந்தனைகளை முன்வைத்துள்ளனர்.