டேபிளில் மிக்சர் வைத்திருந்தால் சாப்பிட்டிருப்பார்கள் - பழனிசாமியை கலாய்த்த செந்தில்பாலாஜி

V. Senthil Balaji Coimbatore ADMK Edappadi K. Palaniswami
By Sumathi Jul 01, 2025 01:30 PM GMT
Report

அதிமுக, பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளது செந்தில்பாலாஜி விமர்சித்துள்ளார்.

செந்தில் பாலாஜி 

கோவை பீளமேடு பகுதியில் உள்ள தனது அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “வரும் 3-ம் தேதி கோவை மாவட்டத்தின் 10 சட்டமன்றத் தொகுதிகளிலும்,

senthil balaji - edappadi palanisamy

3,117 வாக்குச்சாவடிகளிலும் ‘ஓரணியில் தமிழ்நாடு’பணிகள் முன்னெடுக்கப்பட உள்ளோம். நாளை மாலை கோவை, திருப்பூர், நீலகிரி ஆகிய மூன்று மாவட்டங்களில் பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ளது. மேலும், 10 லட்சத்திற்கும் மேற்பட்டோரை கோவை மாவட்டத்தில் திமுக உறுப்பினர்களாக இணைக்க உள்ளோம்.

தமிழக இளைஞர்கள் திமுகவுடனே இருப்பதாகவும், புதிய கட்சிகளுக்கு யாரும் செல்லவில்லை. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், தவெகவிலிருந்து திமுகவிற்கு வந்தவர்களைச் சந்தித்தது வழக்கமான நடைமுறையே, 2026 சட்டமன்றத் தேர்தலில் கோவை மாவட்டத்தின் 10 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும்.

எடப்பாடி வீட்டுக்கும் செல்வேன்; திமுக கூட்டணியில் கூடுதல் கட்சிகள் இணைய வாய்ப்பு - ஸ்டாலின்

எடப்பாடி வீட்டுக்கும் செல்வேன்; திமுக கூட்டணியில் கூடுதல் கட்சிகள் இணைய வாய்ப்பு - ஸ்டாலின்

அதிமுக கூட்டணி

முந்தைய அதிமுக ஆட்சியில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து அப்போதைய முதல்வர் டிவியில் பார்த்து தெரிந்து கொண்டதாகக் கூறியதை நினைவுகூர்ந்தார். ஆனால், தற்போதைய திமுக அரசு உடனடி நடவடிக்கைகளை எடுத்துள்ளார். தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை விடுபட்டவர்களுக்கு 10,000 முகாம்கள் நடத்தப்பட உள்ளது.

டேபிளில் மிக்சர் வைத்திருந்தால் சாப்பிட்டிருப்பார்கள் - பழனிசாமியை கலாய்த்த செந்தில்பாலாஜி | Senthil Balaji Kidding Edappadi And Mixture

அதிமுக ஆட்சியில் பறிபோன மாநில உரிமைகளை முதல்வர் ஸ்டாலின் மீட்டு வருகிறார். கோவையில் பெரியார் நூலகம், தங்க நகை தொழிற்பேட்டை போன்ற திட்டங்கள் நீண்டகால கோரிக்கைகளாக இருந்து நிறைவேற்றப்பட்டுள்ளது.

பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று கூறியவர்கள், இப்போது அமைதியாக அவர்களுடன் இணைந்திருக்கின்றனர். டேபிளில் மிக்சர் வைத்திருந்தால் அதைச் சாப்பிட்டு இருப்பார்கள்” எனத் தெரிவித்தார்.