செந்தில் பாலாஜி கட்டபொம்மனை காட்டி கொடுத்த எட்டப்பன் போல: எடப்பாடி பழனிச்சாமி ஆவேசம்
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் அனைத்து கட்சிகளும் அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர் அரசியல் கட்சிகள் அந்த வகையில், கரூர் தொகுதியின் அதிமுக வேட்பாளர் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை ஆதரித்து முதல்வர் பழனிசாமி தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது பேசிய முதல்வர் பழனிசாமி எம். ஆர். விஜயபாஸ்கர்.விஜயபாஸ்கர் மிகச் சிறந்த உழைப்பாளி; உண்மையிலேயே பொதுமக்கள் கூப்பிட்ட குரலுக்கு ஓடி வருபவர். பண்பாளர், அவரை வெற்றிபெற வைக்க இரட்டை இலை சின்னத்தில் வாக்களியுங்கள் என கூறினார்.

தொடர்ந்து பேசிய முதல்வர் பழனிச்சாமி திமுக சார்பில் நிறுத்தப்பட்டுள்ள திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி ஏமாற்றுவதில் கில்லாடி . அதிமுகவின் ஆட்சியைக் கவிழ்க்க திமுக பக்கம் சென்றவர் செந்தில்பாலாஜி. ஐந்து கட்சிக்கு மாறய வேட்பாளர் தான் திமுகவின் செந்தில் பாலாஜி. செந்தில் பாலாஜி பச்சோந்தி, அவரை நம்பி ஏமாற வேண்டாம்.
சட்டமன்றத்திலும் பொதுக் கூட்டத்திலும் ஸ்டாலின் விமர்சித்த செந்தில் பாலாஜி இன்று புகழ்ந்து பேசுகிறார்.
கட்டபொம்மனை காட்டி கொடுத்த எட்டப்பன் போல அதிமுக அரசை கவிழ்க்க நினைத்தவர் செந்தில் பாலாஜி என பேசினார்.