செந்தில் பாலாஜி வீட்டிலும் ஐ.டி ரெய்டு. திமுகவைத் தொடர்ந்து குறிவைக்கிறதா பாஜக?
தமிழகம் முழுவதும் திமுகவினர் இல்லத்தில் பல்வேறு இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள். கடந்த சில தினங்களுக்கு முன்பு திருவண்ணாமலை திமுக வேட்பாளர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான இடங்களிலும் வருமான வரித்துறை சோதனை நடத்தியிருந்தது. இன்று திமுக தலைவர் ஸ்டாலின் மகளுக்கு சொந்தமான இடங்களிலும் வருமான வரித்துறை சோதனை நடத்தியிருந்தது.

இந்தநிலையில் தற்போது கரூர் மாவட்டத்தில் திமுக சார்பில் போட்டியிடும் செந்தில் பாலாஜியின் ராமேஸ்வரபட்டியில் உள்ள அவரது வீடு மற்றும் கரூர் நகர் ராமகிருஷ்ணபுரத்தில் உள்ள சகோதரர் அசோக் இல்லம், ராயனூர் உள்ள நகர செயலாளர் தாரணி சரவணன் அவர்களின் இல்லம் உள்ளிட்ட 3 இடங்களில் மதுரை வருமான வரித்துறையினர் அதிரடியாக சோதனை நடத்தி வருகிறார்கள்.
தேர்தல் சமயத்தில் வருமான வரித்துறை மூலம் எதிர்க்கட்சியினரை மட்டும் பாஜக தொடர்ந்து குறிவைத்து வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.