செந்தில் பாலாஜியை மிரட்டிய விவகாரம்: அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்தது தேர்தல் ஆணையம் !

dmk balaji annamalai file
By Jon Apr 02, 2021 07:04 PM GMT
Report

பாஜக வேட்பாளர் அண்ணாமலை மீது தேர்தல் ஆணையம் வழக்குப்பதிவு செய்துள்ளது. கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில் பாஜக சார்பில் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் எம்எல்ஏவாக இருக்கும் செந்தில் பாலாஜியை மிரட்டும் வகையில் அண்ணாமலை பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

அந்த வீடியோவில் செந்தில்பாலாஜியை எல்லாம் தூக்கி போட்டு மிதிச்சேன்னா, பல்லு கில்லு எல்லாம் வெளியே வந்துடும். உன்ன மாதிரி எவ்வளவு பெரிய ஃபிராடுகளை எல்லாம் பார்த்துட்டு வந்திருக்கேன் என கூறும் அண்ணாமலை, எனக்கு இன்னொரு முகம் இருக்கு அது கர்நாடகா முகம் அதை நான் இங்கே காட்டவா என கூறியிருப்பார்.

செந்தில்பாலாஜிக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியது தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிரானது. எனவே, அண்ணாமலை மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்கட்சிகள் கோரிக்கை வைத்தன.

  செந்தில் பாலாஜியை மிரட்டிய விவகாரம்: அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்தது தேர்தல் ஆணையம் ! | Senthil Balaji Intimidation Files Case Annamalai

இந்தநிலையில், கரூர் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜியை மிரட்டிய புகாரில் அரவகுறிச்சி பாஜக வேட்பாளர் அண்ணாமலை மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.

ஆனால் தேர்தலுக்கு இன்னும் 4 நாட்கள் உள்ள நிலையில் அண்ணாமலை மீது தேர்தல் ஆணையம் என்ன நடவடிக்கை எடுக்கும் என்று அரசியல் கட்சியினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.