செந்தில் பாலாஜியின் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலிசார் சோதனை
கரூரில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலிசார் இன்று காலை 7 மணி முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.
தவெக எம்எல்ஏ இளையராஜாவிடம் வாக்கெடுப்பின் போது கட்சி மாறி வாக்களிக்க 35 கோடி ரூபாய் பேரம் பேசியதாக அவர் தொடர்ந்த வழக்கில் 14 பேரை போலிசார் கைது செய்தனர்.
இதன் பின்னணியில் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் இருப்பதாகவும், அவர்களை கைது செய்யும் முயற்சியில் போலிசார் இறங்கினர்.

இதனைதொடர்ந்து அவர்கள் முன்ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்த நிலையில் ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.
இந்நிலையில் கரூரில் செந்தில் பாலாஜியின் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலிசார் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.
செந்தில் பாலாஜியின் உதவியாளர் சுப்பிரமணியின் மூர்த்திபாளையத்தில் உள்ள வீட்டிலும், கரூர் கோயம்பள்ளியில் உள்ள திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் பாஸ்கர் வீட்டிலும், கரூர் கோதை நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கார்த்திக் என்பவரது வீட்டிலும் சோதனை நடந்து வருகிறது.