செந்தில் பாலாஜி உடல்நிலை சீராக உள்ளது - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்..!
அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல் நிலை சீராக உள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
``அறுவை சிகிச்சைக்கு பின் அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை சீராக உள்ளது. அவர் வேறு அறைக்கு மாற்றப்பட்டு மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்து வருகிறார்'' என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை சைதாப்பேட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், ‘’தனியார் பள்ளி மாணவர்கள் அரசு பள்ளிகளை நோக்கி வரும் நிலையை ஏற்படுத்தி வருகிறோம்.
சென்னை மருத்துவக் கல்லூரி மாணவர் விடுதியை சீர்செய்யும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றத்திற்கு புதிய கட்டிடம் வேண்டும் என்பதால் தான் மாணவர் விடுதியை மாற்ற வேண்டியதாக இருந்தது.
மாணவர்களுக்கு புதிய விடுதிகள் கட்டும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜியை பொறுத்தவரை அறுவை சிகிச்சைக்கு பின் அவரது உடல்நிலை சீராக உள்ளது. வேறு அறைக்கு மாற்றப்பட்டும் மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார்.
முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டை கொண்டாடும் வகையில், மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் வரும் 24-ம் தேதி 100 இடங்களில் மெகா மருத்துவ முகாம் நடைபெறவுள்ளது.