சாதாரண வார்டிற்கு மாற்றப்பட்டார் அமைச்சர் செந்தில் பாலாஜி..!
காவேரி மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில் அவர் தற்போது சாதாரண வார்டிற்கு மாற்றப்பட்டுள்ளார்.
நீதிமன்றம் அனுமதி
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களிலும் அவரது இல்லத்திலும் அமலாக்கத்துறையில் சோதனையில் ஈடுபட்டனர்.
பின்னர் அவரை அமலாக்கத்துறையினர் நள்ளிரவு கைது செய்து அழைத்துச் சென்ற போது அவருக்கு நெஞ்சுவழி ஏற்பட்டு ஓமந்துாரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் 4 இடங்களில் அடைப்பு இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரை காவேரி மருத்துவமனையில் அனுமதித்து இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ள நீதிமன்றத்திடம் அனுமதி கோரப்பட்டது.
சாதாரண வார்டுக்கு மாற்றம்
நீதிமன்றம் அமைச்சர் செந்தில் பாலாஜியை காவேரி மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்க அனுமதி அளித்தது.
இதையடுத்து அவர் காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் பின்னர் அவருக்கு கடந்த 21 ஆம் தேதி அதிகாலை இதய ரத்த நாளங்கள் அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டது.
5 மணி நேரத்திற்கும் மேலாக சிகிச்சை நடைபெற்றது. அறுவை சிகிச்சைக்கு பிறகு உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்து இருந்தது.
தற்போது காவேரி மருத்துவமனையில் 4வது மாடியில் உள்ள சாதாரண பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளார்.